என் அம்மாவை ஒரு முறை கூட பாசத்தோடு அணைத்ததில்லை - ஏ.ஆர்.ரஹ்மான்

By Mayura Akilan

இசையால் உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை வசீகரித்துள்ள, அரவணைத்துள்ள இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது தாயை ஒருமுறை கூட பாசத்துடன் அணைத்ததில்லையாம். இதை அவரே கூறியுள்ளார்.

இதுகுறித்து நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ரஹ்மான் விரிவாகப் பேசியுள்ளார். தனது தாயார் தான் தனது இசையறிவை கண்டுபிடித்து தன்னை ஊக்குவித்தவர் என்றும் பெருமையுடன் கூறியுள்ளர் ரஹ்மான்.

தந்தை இசையமைப்பாளராக இருந்தபோதும் தான் இசையின் பக்கம் திரும்ப தாய்தான் காரணம் என்றும் பெருமையுடன் கூறியுள்ளார் ரஹ்மான்.

அம்மா கஸ்தூரிதான் காரணம்

அம்மா கஸ்தூரிதான் காரணம்

எனது இசையறிவுக்கு அம்மா கஸ்தூரி சேகர்தான் காரணம். அவர்தான் எனது இசையறிவை உணர்ந்தவர்.

தந்தை இறந்த பின்னர்

தந்தை இறந்த பின்னர்

எனது தந்தை இளம் வயதிலேயே இறந்து போய் விட்டார். இதையடுத்து வீட்டில் இருந்த இசைக் கருவிகளை விற்கலாம் என பலரும் சொன்னார்கள்.

என் மகன் இருக்கிறான்

என் மகன் இருக்கிறான்

ஆனால் எனது தாயார் மறுத்து விட்டார்கள். எனது மகன் இருக்கிறான். அவன் இசையமைப்பாளராக வருவான். அவன் பார்த்துப்பான் என்று நம்பிக்கையுடன் கூறினார். என்னையும் ஊக்குவித்தார். நான் இசையமைப்பாளராக மாற இதுதான் காரணம்.

மிகப் பெரிய ஆன்மீகவாதி

மிகப் பெரிய ஆன்மீகவாதி

எனது தாயார் என்னை விட ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர். இறை பக்தி மிக்கவர். முடிவு எடுப்பதில் சிறந்தவர். துரிதமாக முடிவெடுப்பார்.

இசைதான் இனி உன் உலகம்

இசைதான் இனி உன் உலகம்

நான் பள்ளியில் படி்ததபோது பாதியிலேயே நிறுத்தி இசைதான் உனக்குப் பொருத்தமானது என்று சுட்டிக் காட்டியர்.

சினிமா அம்மா கிடையாது

சினிமா அம்மா கிடையாது

சினிமாவில் வருவது போல அம்மா, மகனே என்று கட்டிக் கொள்ளும் அம்மா, மகனாக நாங்கள் இல்லை. ஏன், நான் ஒருமுறை கூட எனது தாயாரை கட்டிக் கொண்டதே இல்லை.

நான் ரஜினி ரசிகன்

நான் ரஜினி ரசிகன்

நான் ஒரு முழுமையான ரஜினி ரசிகன். எனவே அவரைப் போலவே எதிலும் பாசிட்டிவான சிந்தனையுடன் இருப்பவன். வாழ்க்கையிலிருந்து நிறைய கற்றுக் கொள்கிறேன் என்றார் ரஹ்மான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X