செட்ல தளபதி செல்போன் யூஸ் பண்ணி நான் பார்த்ததே இல்ல... மகேந்திரன் சிலிர்ப்பு

சென்னை : மாஸ்டர் படத்தில் இளவயது பவானி கேரக்டரில் நடித்து சிறப்பான கமெண்ட்ஸ் வாங்கியுள்ளார் நடிகர் மகேந்திரன்.

தன்னுடைய 3 வயதிலிருந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் மகேந்திரன்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் குறித்த நினைவுகளை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தொடரும் திரைப்பயணம்

தொடரும் திரைப்பயணம்

தன்னுடைய 3 வயதிலிருந்து நடித்து வருகிறார் நடிகர் மகேந்திரன். கடந்த 15 ஆண்டுகளாக அவரது திரைப்பயணம் தொடர்ந்து வருகிறது. 6 மொழிகளில் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். இது இந்தியாவில் ஒரு சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

சிறந்த குழந்தை நட்சத்திர விருது

சிறந்த குழந்தை நட்சத்திர விருது

கடந்த 1994ல் வெளியான நாட்டாமை படத்தில் அறிமுகமான மகேந்திரன் அதற்கு அடுத்த ஆண்டே தாய்க்குலமே தாய்க்குலமே என்ற படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தமிழ்நாடு மாநில விருதை பெற்றார். இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் படத்தில் குட்டி பவானி கேரக்டரில் நடித்துள்ளார்.

சிறப்பான கமெண்ட்ஸ்

சிறப்பான கமெண்ட்ஸ்

இந்த படம் அவருக்கு சிறந்த கமெண்ட்ஸ்களை பெற்றுத் தந்துள்ளது. அந்த கேரக்டர் குறித்து இயக்குநர் லோகேஷிடம் நடிகர் விஜய் பாராட்டியதாகவும் அந்த கேரக்டருக்கு மகேந்திரன் சிறப்பாக பொருந்தியதாக அவர் கூறியதாகவும் படம் வெளிவந்த நேரத்தில் மகேந்திரன் தெரிவித்திருந்தார்.

செல்போன் உபயோகிக்காத விஜய்

செல்போன் உபயோகிக்காத விஜய்

இந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்தில் விஜய் குறித்த நினைவுகளை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். மாஸ்டர் படத்தின் சூட்டிங்கின்போது செட்டில் விஜய் செல்போன் உபயோகிப்பதை தான் ஒருபோதும் பார்த்ததில்லை என்று அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். அதேபோல மற்ற படங்களின் சூட்டிங்கின்போதும் அவர் செல்போன் பயன்படுத்த மாட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

காமெடி செய்யும் தளபதி

காமெடி செய்யும் தளபதி

அவர் மிகவும் அமைதியானவர் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருப்பதை சுட்டிக் காட்டியுள்ள அவர், ஆனால் செட்டில் மற்றவர்களை கலாய்த்து காமெடி செய்வார் என்று மகேந்திரன் கூறியுள்ளார். அவர்களின் தோள்களில் கையை வைத்து அவர் உரிமையுடன் கலாய்ப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X