இப்படி உளறிட்டீங்களே, ஊட்டுக்காரம்மாவுக்கு தெரியுமா?: வசமாக சிக்கிய ஹீரோ
மும்பை: மனைவி குறித்து பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் போட்ட ட்வீட்டை பார்த்த ரசிகர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் மனைவி ட்விங்கிள் கன்னா நடிப்பதை நிறுத்தி விட்டு புத்தகங்கள் எழுதி வருகிறார். ட்விங்கிள் எழுதும் கட்டுரைகள் மற்றும் ட்வீட்டுகளும் மிகவும் பிரபலம்.

ட்விங்கிள் கன்னா எழுதிய பைஜாமாஸ் ஆர் ஃபர்கிவிங்('Pyjamas are Forgiving') புத்தகம் 1 லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்துள்ளது. இந்நிலையில் கேன் அன்ட் ஏபிள் புத்தகம் வெளியாகி 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் நாவல் ஆசிரியர் ஜெஃப்ரி ஆர்ச்சரை ட்விங்கிள் மற்றும் அக்ஷய் குமார் சந்தித்து பேசியுள்ளனர்.
அந்த சந்திப்பின்போது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு அக்ஷய் குமார் கூறியிருப்பதாவது,
பைஜாமாஸ் ஆர் ஃபர்கிவிங் புத்தகத்தின் 1 லட்சம் பிரதிகள் விற்றதை மனைவி கொண்டாடினார். மிஸ்டர் ஜெஃப்ரி ஆர்ச்சர் தனது கேன் அன்ட் ஏபிள் புத்தகத்தின் 40வது ஆண்டு நிறைவை கொண்டாடினார். நான்?. நான் அந்த இருவரின் புத்தகங்களையும் படிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அக்ஷய் குமாரின் ட்வீட்டை பார்த்த நெட்டிசன்களோ, சார் இப்படி உளறிவிட்டீர்கள், வீட்டுக்காரம்மாவின் புத்தகத்தை படிக்கவில்லை என்பது அவருக்கு தெரியுமா, அடித்துவிடப் போகிறார் என்று கலாய்த்துள்ளனர்.
பெண்கள் முன்னேற்றம் பற்றி பெரிதாக பேசும் நீங்கள் உங்களின் மனைவி எழுதிய புத்தகத்தையே படிக்கவில்லையா?. இது நியாயம் இல்லை. மனைவி மீது பாசம் இருந்தால் புத்தகத்தை முதலில் படிங்க சார் என்று சிலர் தெரிவித்துள்ளனர். சிலரோ, அவரை கனடாவுக்கே திரும்பிச் செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.
அக்ஷய் குமார் கனடா குடிமகன் என்பதால் அவரை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சமூக வலைதளங்களில் திட்டித் தீர்க்கிறார்கள் நெட்டிசன்கள். இந்திய குடியுரிமை வேண்டாம் என்று தானே கனடா குடியுரிமை பெற்றீர்கள். அப்படி இருக்க சம்பாதிக்க மட்டும் இந்தியா தேவைப்படுகிறதோ என்று நெட்டிசன்கள் அக்ஷய் குமாரை அவ்வப்போது விளாசுகிறார்கள்.
அக்ஷய் குமார் ரோஹித் ஷெட்டியின் இயக்கத்தில் சூர்யவன்ஷி படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடிக்கிறார். பல ஆண்டுகள் கழித்து அக்கியும், கத்ரீனாவும் மீண்டும் சேர்ந்து நடிக்கிறார்கள்.
சூர்யவன்ஷி தவிர்த்து மிஷன் மங்கல் படத்தில் நடிக்கிறார் அக்ஷய் குமார். அந்த படத்தில் வித்யா பாலன், டாப்ஸி, சோனாக்ஷி சின்ஹா, நித்யா மேனன், ஷர்மான் ஜோஷி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். மேலும் ஹவுஸ்ஃபுல் 4, குட் நியூஸ் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் அக்ஷய் குமார்.


Click it and Unblock the Notifications











