அதான் எல்லாமே கசிந்து, வைரலாகிடுச்சே, இனி மறைக்க என்னிடம் ஒன்னுமே இல்லை: ராதிகா

By Siva

Recommended Video

இனி மறைக்க என்னிடம் ஒன்னுமே இல்லை: ராதிகா ஆப்தே- வீடியோ

மும்பை: இனி மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்று கூறி சிரிக்கிறார் நடிகை ராதிகா ஆப்தே.

பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருபவர் ராதிகா ஆப்தே. என்ன நடந்தாலும் சரி இனி தெலுங்கு படங்களில் மட்டும் நடிக்கவே கூடாது என்ற முடிவில் உள்ளார்.

தெலுங்கு படத்தில் நடிக்கும்போது ஏற்பட்ட மோசமான அனுபவத்தால் அந்த முடிவுக்கு வந்துவிட்டார்.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

2015ம் ஆண்டில் ராதிகா ஆப்தே அனுராக் கஷ்யப் இயக்கிய மேட்லி குறும்படத்தில் நிர்வாணமாக நடித்த புகைப்படம் ஆன்லைனில் கசிந்து சமூக வலைதளங்களில் வைரலானது. வாட்ஸ்ஆப்பில் அந்த புகைப்படம் தீயாக பரவியது. அதன் பிறகு 2016ம் ஆண்டில் பார்ச்ட் படத்தில் ராதிகா ஆப்தே ஆதில் ஹுசைனுடன் நடித்த படுக்கையறை காட்சிகள் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தின.

ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தே

நிர்வாண புகைப்படம், படுக்கையறை காட்சி என்று அடுத்தடுத்து லீக்காகி சர்ச்சையில் சிக்கினார் ராதிகா ஆப்தே. என்னம்மா இப்படி நிர்வாணமாக நடிக்கிறீங்களேம்மா என்று பலரும் கேட்டனர். வெளிநாடுகளில் எல்லாம் நிர்வாணமாக நடிப்பது சகஜம். கலையை பாருங்கள், உடையை பார்க்காதீர்கள் என்று விளக்கம் அளித்தார் ராதிகா.

மறைவு

மறைவு

இன்டர்நெட்டில் கசிந்த புகைப்படங்கள் குறித்து ராதிகா ஆப்தே தற்போது மீண்டும் பேட்டி அளித்துள்ளார். பேட்டியின்போது அவர் கூறியதாவது, என் நிர்வாண புகைப்படங்கள் கசிந்துவிட்டதாக என் அம்மா முதலில் கூறினார். அந்த புகைப்படங்களை அவருக்கு யாரோ வாட்ஸ்ஆப்பில் அனுப்பியுள்ளனர். இரண்டாவது முறை என் கார் டிரைவர் கூறினார் என்றார் ராதிகா.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

என் நிர்வாண புகைப்படங்கள் ஏற்கனவே கசிந்து வைரலாகிவிட்டன. இனி மறைப்பதற்கு எதுவும் இல்லை. நான் எது வேண்டுமானாலும் செய்யலாம். அதை வைத்து யாராலும் செய்தி வெளியிட முடியாது என்று கூறி சிரித்தார் ராதிகா. ஆங்கில படம் ஒன்றில் நடித்து முடித்துள்ள ராதிகா தற்போது இந்தி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X