கதுவா சிறுமி வழக்கு செய்திகளை படிப்பதையே நிறுத்திட்டேன்: ஆலியா பட்

By Siva

Recommended Video

கதுவா சிறுமி வழக்கு செய்திகளை படிக்க மாட்டேன் : ஆலியா பட்- வீடியோ

மும்பை: கதுவா சிறுமி குறித்த செய்திகளை படிப்பதை நிறுத்திவிட்டதாக பாலிவுட் நடிகை ஆலியா பட் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்தார்கள்.

இந்நிலையில் இது குறித்து பாலிவுட் நடிகை ஆலியா பட் கூறியிருப்பதாவது,

கோபம்

கோபம்

பாலிவுட்காரர்கள் மட்டும் அல்ல ஒட்டு மொத்த நாட்டு மக்களும் கோபமாக உள்ளனர். இது வெட்கப்பட வேண்டிய விஷயம். இப்படி ஒரு விஷயம் நடந்துவிட்டதே என்று ஒரு பெண்ணாக, மனுஷியாக வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன்.

செய்திகள்

செய்திகள்

கதுவா சிறுமியின் வழக்கு பற்றிய செய்திகளை படிப்பதை நிறுத்திவிட்டேன். முதல் இரண்டு நாட்கள் அது குறித்த அனைத்து செய்திகளையும் படித்தேன். அதை தொடர்ந்து படித்தால் வேதனையும், கோபமும் தான் அதிகரிக்கிறது. அதனால் கதுவா செய்திகளை படிப்பதை நிறுத்திவிட்டேன்.

நம்பிக்கை

நம்பிக்கை

கதுவா சிறுமிக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். நாம் அனைவரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கக் கூடாது என்றார் ஆலியா பட்.

வழக்கு

வழக்கு

கதுவாவில் 8 வயது சிறுமியை சீரழித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மைனர் உள்ளிட்ட 8 பேரும் தாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். சிறுமி ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் திட்டமிட்டு கடத்தி இவ்வாறு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X