உங்களுக்கு 30, எனக்கு 21 தானே ஆகுது, அதுக்கு டைம் இருக்கு: தனுஷிடம் தெரிவித்த நடிகை அமிரா
சென்னை: நான் தேசிய விருது வாங்கியவன் நீங்கள் என்று தனுஷ் தனது அனேகன் பட நாயகி அமிரா தஸ்தூரை கேட்டுள்ளார்.
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், அமிரா தஸ்தூர் நடித்துள்ள படம் அனேகன். அண்மையில் தான் இசை வெளியீட்டு விழாவை நடத்தினார்கள். இந்நிலையில் படம் குறித்தும், சக நடிகர், நடிகைகள் பற்றியும் நாயகி அமிரா கூறுகையில்,

படப்பிடிப்பு தளத்தில் நடிப்பதில் எனக்கும் தனுஷுக்கும் இடையே போட்டி இருந்தது. ஆனால் அது ரசிக்கும்படி இருந்தது. நான் பொதுவாகவே எதையும் போட்டி போட்டுக் கொண்டு செய்பவள். ஒவ்வொரு காட்சியையும் நடித்து முடித்த பிறகு நான் சிறப்பாக நடித்துள்ளேன் என்று நினைப்பேன். ஆனால் தனுஷோ என்னமோ என்பார்.
ஒரு முறை அவர் என்னை பார்த்து நான் தேசிய விருது வாங்கியுள்ளேன். நீங்கள்? என்று கேட்டார்.
நான் தேசிய விருதை பெறவில்லை. அதனால் சிறிது நேரம் யோசித்துவிட்டு உங்களுக்கு 30 வயதாகிறது. எனக்கு 21 தானே ஆகிறது. எனக்கு இன்னும் டைம் உள்ளது என்றேன்.
அனேகன் படத்தில் நடித்தது அருமையான அனுபவம் என்றார்.


Click it and Unblock the Notifications











