'எல்லா கேரக்டர்லயும் நடிச்சு, லேடி விஜய் சேதுபதி ஆகணும்..' பிரபல நடிகையின் வேற லெவல் ஆசை!

By

சென்னை: தான், லேடி விஜய் சேதுபதி ஆகவேண்டும் என்று விரும்புவதாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

நெல்சன் வெங்கடேசன் இயக்கிய, ஒருநாள் கூத்து படம் மூலம், தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ்.

இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் கவனிக்கப்பட்டதை அடுத்து, தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன.

டிக் டிக் டிக்

டிக் டிக் டிக்

'பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தில் உதயநிதி ஜோடியாக நடித்தார். பார்த்திபன், சூரி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை தளபதி பிரபு இயக்கியிருந்தார். அடுத்து ஜெயம் ரவி ஜோடியாக, டிக் டிக் டிக் படத்தில் நடித்தார். இந்தப் படம் ஹிட்டானது. இதில் நிவேதாவின் நடிப்பு பேசப்பட்டது.

திமிரு பிடிச்சவன்

திமிரு பிடிச்சவன்

பின்னர் விஜய் ஆண்டனி ஜோடியாக, திமிரு பிடிச்சவன், விஜய் சேதுபதி ஜோடியாக, சங்கத்தமிழன், பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா. சமீபத்தில் சூப்பர் ஹிட்டான அல்லு அர்ஜுனின், அலா வைகுந்தபுரம்லோ படத்தில் நடித்திருந்தார்.

போலீஸ் கேரக்டர்

போலீஸ் கேரக்டர்

இப்போது தமிழில் மகிழ் திருமேனி இயக்கத்தில் ஹிட்டான 'தடம்' படத்தின் ரீமேக்கில் நடித்துள்ளார். 'ரெட்' என்று இதற்கு டைட்டில் வைத்துள்ளனர். இதில் அவர் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார். தமிழில் இந்த கேரக்டரில், நடிகை வித்யா பிரதீப் நடித்திருந்தார். இதை கிஷோர் திருமலா இயக்கியுள்ளார். ராம் ஹீரோவாக நடித்துள்ளார்.

முதலில் கஷ்டம்

முதலில் கஷ்டம்

இதில் நடித்தது பற்றி நடிகை நிவேதா பெத்துராஜ் கூறும்போது, இந்த படத்தில் வழக்கமான போலீசாக இல்லாமல், வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறேன். கடினமாக முகத்தை வைத்துகொண்டு நடிக்க வேண்டும். முதலில் கஷ்டமாக இருந்தது. பிறகு பழகிவிட்டேன்.

என்ன தவறு?

என்ன தவறு?

தெலுங்கில் இரண்டாவது ஹீரோயினாக நடிப்பது பற்றி கேட்கிறார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது. கிளாமராக நடிப்பது பற்றியும் கேட்கிறார்கள். நடிப்பேன். ஆனால், அந்த கேரக்டருக்கு அது முக்கியமானதாக இருக்க வேண்டும். இப்போது படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன்.

லேடி விஜய்சேதுபதி

லேடி விஜய்சேதுபதி

நான், லேடி விஜய் சேதுபதி போல இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அவர் அனைத்து விதமான கேரக்டரிலும் நடித்து வருகிறார். நானும் அப்படி நடிக்க விரும்புகிறேன். ஹீரோயின் என்பதை தவிர, ஒரு பெண்ணால் அனைத்துவிதமான கேரக்டர்களிலும் ஏன் நடிக்க முடியாது? என்றார் நிவேதா பெத்துராஜ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X