Lokesh Kanagaraj - லோகேஷ் கனகராஜ் படத்தில் ரோல் வேண்டாம் சாக வேண்டும் - அனுராக் காஷ்யப்

சென்னை: Lokesh Kanagaraj (லோகேஷ் கனகராஜ்) லோகேஷ் கனகராஜின் படத்தில் தனக்கு ரோல் எதுவும் வேண்டாம். அந்த யுனிவர்ஸில் சாக வேண்டும் என அனுராக் காஷ்யப் தெரிவித்திருக்கிறார்.

இந்திய அளவில் இப்போது பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மாநகரத்தில் தொடங்கி விக்ரம்வரை அவர் இயக்கிய அனைத்து படங்களுமே ஹிட்டானதால் அவருக்கான டிமாண்ட் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக விக்ரம் படத்தின் மெகா ப்ளாக் பஸ்டர் அவரை உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது. இதன் காரணமாக பிற மொழி நடிகர்களும் லோகேஷின் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டிவருகின்றனர். ஆனால் ரொம்பவே பிஸியாக இருக்கிறார்.

லோகேஷின் லியோ: விஜய்யை வைத்து இப்போது லியோ படத்தை இயக்கிவருகிறார் லோகேஷ் கனகராஜ். படத்தின் ஷூட்டிங் முடியும் தருவாயில் இருக்கிறது. அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. ஷூட்டிங் இன்னும் முடியாதபோது படத்தின் பிஸ்னெஸ் இதுவரை 400 கோடி ரூபாய்க்கும் அதிகம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர இன்னமும் கேரளாவின் தியேட்டர் உரிமை உள்ளிட்ட சில பிஸ்னெஸ் இன்னும் தொடங்காததால் ரிலீஸுக்கு முன்னதாகவே 500 கோடி ரூபாயை படம் சம்பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

I Want to die in Lokesh Kanagaraj Films says anurag Kashyap

கைதி2: லியோ படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இரண்டு படங்களை இயக்கவிருக்கிறார். அதில் ஒன்று கைதி படத்தின் இரண்டாம் பாகம். படத்தின் முதல் பாகம் மெகா ஹிட்டாகியுள்ளதால் அதன் இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இன்னமும் குறையாமல் இருக்கிறது. அதேசமயம் ரஜினியின் 171ஆவது படத்தை இயக்குவதற்கு லோகேஷ் கனகராஜ் கமிட்டாகியிருக்கிறார். அதுதான் ரஜினியின் கடைசி படமாக இருக்கும் எனவும் தகவல் ஒன்று உலாவுகிறது

திரைக்கதை மேஜிக்: லோகேஷ் கனகராஜின் கதை தேர்வைவிட அவரது திரைக்கதை அமைப்பு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. குறிப்பாக விக்ரம் படத்தில் அவர் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் சென்சேஷனல் ஹிட் அடித்திருக்கிறது. எனவே பல நடிகர்கள் எல்சியூவில் ஒரு சீனிலாவது தலை காட்டிவிட மாட்டோமா என்று நினைத்துவருகின்றனர். இந்நிலையில் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் லோகேஷ் குறித்து பேசியிருக்கிறார்.

அனுராக் பேட்டி: சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய அவர், "லோகேஷ் கனகராஜின் எல்சியூவில் எனக்கு ரோல் எல்லாம் வேண்டாம். அவரது படத்தில் நான் இறந்துவிட வேண்டும். ஏனென்றால் நடிகர்களுக்கு அவரது படத்தில் புகழ்பெற்ற மரணத்தை கொடுக்கிறார்" என்றார். மேலும் பேசிய அவர், விடுதலை படத்தை பார்த்தேன். அது எனக்கு பிடித்திருந்தது. சூரியும், ராஜீவ் மேனனும் ஆச்சரியப்படுத்தினார்கள்" எனவும் கூறினார்.

லோகேஷ் கொடுக்கும் மரணம்: லோகேஷ் கனகராஜ் தனது படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களை மரணமடையும்படி செய்கிறார் என ரசிகர்கள் பொதுவாக கூறுவதுண்டு. அவர் அப்படி செய்வது சில காலம் ட்ரெண்டிங்கிலும் இருந்தது. அதை மையப்படுத்திதான் லோகேஷ் புகழ்பெற்ற மரணத்தை கொடுக்கிறார் என அனுராக் கூறியிருக்கிறார். அவரது பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X