Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரஜினி,கமலை ஒன்றாக சேர்த்து பேட் பாய்ஸ் மாதிரி ஒரு படம் பண்ணனும்... வெங்கட்பிரபு-வின் கனவு!
சென்னை: தொடர் வெற்றி படங்களின் மூலம் இதுவரை தமிழில் கலக்கிக் கொண்டிருந்த இயக்குனர் வெங்கட்பிரபு முதல்முறையாக தெலுங்கில் நாக சைதன்யா நடிக்கும் படத்தை இயக்கி அறிமுகமாகிறார்
மாநாடு மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அதை தொடர்ந்து வெங்கட் பிரபுவுக்கு மன்மதலீலை வெளியாகி அந்தப் படமும் வெற்றி அடைந்தது தமிழில் அடுத்ததாக முன்னணி நடிகர் ஒருவரை வைத்து இயக்க உள்ள வெங்கட்பிரபு கமல், ரஜினி இருவரையும் ஒன்றாக வைத்து பேட் பாய்ஸ் மாதிரி ஒரு படம் பண்ண வேண்டும் என்ற கனவு உள்ளது என தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
என்னை அறிமுகப்படுத்தியது வெங்கட்பிரபு இல்லை.. பிரேம்ஜி நடிகராக உதவியவர் யார் தெரியுமா!

முழுக்க முழுக்க புதுமுகங்கள்
இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் என்றாலே கலகலப்புக்கும் கிளுகிளுப்புக்கும் பஞ்சமிருக்காது. படம் முழுவதும் அனைவரும் வயிறு குலுங்க சிரிக்கும் அளவிற்கு காமெடியை நிரப்பி வைத்திருப்பார். ஆரம்பத்தில் சில படங்களில் ஹீரோவாக நடித்து வந்த வெங்கட்பிரபு அதன் பிறகு சிறு சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். சென்னை 600028 மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான வெங்கட் பிரபுவுக்கு அந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. முழுக்க முழுக்க புதுமுக நடிகர்களை மட்டுமே வைத்து இயக்கிய இந்த படம் வசூலிலும் பட்டையை கிளப்பியது

ஹாட்ரிக் வெற்றி
சென்னை 600028 கொடுத்த உத்வேகம் சரோஜா, கோவா என இளமை துள்ளலான இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் படங்களை இயக்கி வந்த வெங்கட் பிரபுவுக்கு ஹாட்ரிக் வெற்றிகளாக அமைந்தது. அதை தொடர்ந்து அஜித்தின் 50வது படமாக வெளியான மங்காத்தா வெங்கட் பிரபுவின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றே சொல்லலாம் அஜித் வில்லனாக மிரட்டிய நடிப்பு யுவன்சங்கர் ராஜாவின் அதிர வைக்கும் இசை வெங்கட் பிரபுவின் கலக்கலான இயக்கம் என மங்காத்தா தமிழ் சினிமாவில் பெஞ்ச்மார்க்கை உருவாக்கிய மாபெரும் வெற்றி பெற்றது.

சிம்புவுடன் மாநாடு
கார்த்தியின் நடிப்பில் வெளியான பிரியாணி சூர்யாவின் நடிப்பில் வெளியான மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட திரைப்படங்கள் வெங்கட் பிரபுவுக்கு சிறு சறுக்கலை தந்தது இரண்டு படங்களுமே தோல்வி படமாக அமைந்தது. இந்த நிலையில் அடுத்ததாக சிம்புவுடன் கூட்டணி அமைத்து மாநாடு என்ற மற்றுமொரு பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்தார்.

தெலுங்கில் அறிமுகம்
மாநாடு வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபுவுக்கு மன்மதலீலை வெளியாகி அதுவும் வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்து தமிழில் முன்னணி ஹீரோவை வைத்து இயக்க ஆயத்தமாகி வந்த வெங்கட் பிரபு இப்பொழுது தெலுங்கில் அறிமுகமாகிறார். தெலுங்கில் இளம் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கும் நாக சைதன்யா ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை வெங்கட் பிரபு இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பேட் பாய்ஸ் மாதிரி
அதை தொடர்ந்து மாநாடு தெலுங்கு ரீமேக்கை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இவ்வாறு தனித்துவமான படங்களை இயக்கிய தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ள வெங்கட் பிரபு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரையும் ஒன்றாக ஒரே படத்தில் நடிக்க வைத்து பேட் பாய்ஸ் மாதிரி ஒரு சூப்பரான படம் எடுக்க வேண்டும் என்பது எனது கனவாக இருப்பதாக தனியார் யூடியூப் சேனல் ஒன்றின் பேட்டியில் தெரிவித்துள்ளார்.