வீட்டுக்கு போகணும்..கமல்ஹாசனே சந்திப்பதாக இருந்தாலும் முடியாது..ஹோம் சிக்கால் வாடும் ஜி.பி.முத்து

பிக்பாஸ் வீட்டின் ஸ்டாரான ஜி.பி.முத்து ஹோம் சிக்கால் வாடுகிறார். அவரை சமாதானப்படுத்த எடுக்கும் முயற்சிகள் தோல்விடைந்துள்ளன.

தொடர்ந்து தனது வீட்டுக்கு போகும் முடிவில் அவர் உறுதியாக இருக்கிறார். பிக்பாஸ் அழைத்து பேசியும் பயனில்லை.

தன்னை வீட்டை விட்டு அனுப்பாவிட்டால் உண்ணாவிரதம் இருப்பேன் என மிரட்டும் அளவுக்கு ஜி.பி.முத்து போய்விட்டார்.

பிக்பாஸ் வீட்டின் ஸ்டார் ஜி.பி.முத்து

பிக்பாஸ் வீட்டின் ஸ்டார் ஜி.பி.முத்து

பிக் பாஸ் வீட்டில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் முதலிடத்தில் இருப்பவர் ஜி.பி.முத்து. ஸ்டார் போட்டியாளர் என்று கூட சொல்லலாம். கமல்ஹாசன் போனவாரமும் அவரிடம் அதிக நேரம் செலவழித்தார். மக்களால் அதிகபடியாக விரும்பப்படும் போட்டியாளராகவும் ஜே.பி.முத்து இருக்கிறார் போட்டிகளில் கலந்து கொள்வதிலும் போட்டிகளை வெல்வதிலும் ஜி.பி.முத்து காட்டும் ஆர்வம் அவருக்கு தொடர்ந்து வெற்றிகளை தந்துள்ளது. டான்ஸ் போட்டியில் வெற்றி பெற்றார். முதல் பிக் பாஸ் வீட்டின் முதல் வார தலைவராகவும் அவர் போட்டியில் தேர்வு செய்யப்பட்டார்.

 பிக்பாஸ் அக்ரிமெண்ட் பற்றி அறியாத ஜிபி.முத்து

பிக்பாஸ் அக்ரிமெண்ட் பற்றி அறியாத ஜிபி.முத்து

தொடர்ந்து தன்னுடைய வெள்ளந்தியான பேச்சு நட்புக்கான நடைமுறை மூலம் அனைவரும் கலந்து வருகின்றார் ஜி.பி.முத்து திடீரென ஹோம் சிக்கால் பாதிக்கப்பட்டார். தன்னால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. என்னுடைய வீட்டில் உள்ளவர்கள் ஞாபகம் எனக்கு வருகிறது என்று லேசாக ஆரம்பித்தார். அது அப்படித்தான் இருக்கும் சாதாரணமாக ஏற்படும் ஒன்று, என அவரை சமாதானப்படுத்தினர். ஆனால் நாளாக நாளாக அவர் தன்னால் தூங்க முடியவில்லை சரியாக சாப்பிட முடியவில்லை, கட்டாயம் வீட்டுக்கு போக வேண்டும் என்று தெரிவித்தார். 100 நாள் தங்கவேண்டி வந்துவிட்டு எதற்கு வீட்டிற்கு போகிறீர்கள் என்று கேட்ட பொழுது நான் அப்படி சொல்லவில்லையே அக்ரிமெண்டில் கையெழுத்து போடும்போது இருக்கும் வரை இருந்தால் கிளம்பிடலாம் என்று தானே சொன்னார்கள் என்று வெள்ளந்தியாக சொன்னார்.

ஹோம் மேட்ஸ் சமாதானப்படுத்தியும் சமரசத்துக்கு வராத ஜி.பி.முத்து

ஹோம் மேட்ஸ் சமாதானப்படுத்தியும் சமரசத்துக்கு வராத ஜி.பி.முத்து

எது எப்படியோ எனக்கு தெரியாது நான் வெளியில் போக முடிவு பண்ணிட்டேன். போயிடுவேன் என்று சொன்னார். நீங்கள் இன்னும் சில நாட்கள் அப்படியே கடத்துங்கள் சாதாரணமாகிவிடும் என்று அமுதவாணன் உள்ளிட்ட பலரும் சொல்லியும் அவர் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். நேற்று பிக் பாஸ் அவரை அழைத்து பேசினார் அப்பொழுது தன்னை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள் தன் வீட்டில் உள்ளவர்கள் பார்க்க வேண்டும் என்றெல்லாம் ஜி.பி.முத்து சொன்னார். ஆனால் கொஞ்சம் பொறுங்கள் என்று சொல்லி பிக் பாஸ் அனுப்பி வைத்தார். ஆனாலும் நேற்று முத்து தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார் மைனா அவரை சமாதானப்படுத்த எடுத்த முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை.

மூட் அவுட் மனநிலையில் ஜி.பி.முத்து

மூட் அவுட் மனநிலையில் ஜி.பி.முத்து

இன்று காலையில் இருந்தே ஜி.பி.முத்து மனம் உடைந்த நிலையில் மூட் அவுட்டான நிலையில் காணப்படுகிறார். மற்றவர்கள் ஜாலியாக கிண்டலாக பேசி சிரித்துக்கொண்டிருந்தாலும் மனதை பறிகொடுத்த நிலையில் ஜி.பி.முத்து உட்கார்ந்திருந்ததை பார்க்க முடிந்தது அவரை காட்டி கதிரவன் மகேஸ்வரிடம் எப்படி இருக்கிறார் என்று சைக்கிள் காட்ட ஒன்று பண்ண முடியாது என்ற மகேஸ்வரி தெரிவித்தார் காலை முதலே மூடு விட்டால் இருக்கும் ஜி பி முத்து எதிலும் பங்கேற்காமல் அமைதியாக ஓரமாக உட்கார்ந்து இருக்கிறார் இதை அடுத்து 13 பேர் வரிசையாக நிற்கும் டாஸ்க் வந்தபோதும் இபி முத்து 13 வது ஆளாக போய் நின்று கொண்டார். பின்னர் பிக் பாஸ் அவரை வீட்டிற்குள் அழைத்தார். பிக் பாஸ் அவருக்கு சில யோசனைகளை சொன்னார். உங்களுக்கு வேண்டிய நல்ல சாப்பாடு அனுப்பி வைக்கிறேன் என்று சொல்ல சாப்பாடு எல்லாம் பிரச்சனை இல்லை, யாரிடத்திலும் பழகுவதிலும் பிரச்சனை இல்லை, நான் வீட்டுக்கு போன புள்ள குட்டிங்கள பாக்கணும் என்று ஜி.பி.முத்து அடம் பிடித்தார்.

கமல் சந்திப்பதாக சொல்லியும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாத ஜி.பி.முத்து

கமல் சந்திப்பதாக சொல்லியும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாத ஜி.பி.முத்து

சிறிது நேரம் கழித்து உங்களுடன் கமல் பேச தயாராக இருக்கிறார் என்று பிக்பாஸ் சொன்னார். அதற்கு ஜி.பி.முத்து லைட்டாக சிரித்து விட்டு நான் முதலில் என் தம்பி செந்திலை பார்த்து தங்கிவிட்டு வருகிறேன், அதன் பின்னர் கமல் சாரை சந்தித்து பேசுகிறேன் என்று நிலைமையின் தீவிரம் உணராமல் பேசினார். ஆனால் நான் வீட்டுக்கு போகும் முடிவை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று விடாப்பிடியாக தனது முடிவில் இருந்தார். அப்போது அவரை லேசாக எச்சரித்த பிக்பாஸ் இடையில் நீங்கள் செல்வதாக இருந்தால் அதன் விளைவுகளையும் சந்திக்க வேண்டி இருக்கும் என்று தெரிவித்தார். எனக்கு வீட்டுக்கு போனுங்க என்று மீண்டும் மீண்டும் பிக்பாஸ் இடம் ஜி.பி.முத்து சொல்ல நீங்கள் செல்லுங்கள் நான் பேசிவிட்டு வருகிறேன் என்று பிக் பாஸ் அனுப்பி வைத்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X