பிறந்தநாளை நெருக்கமானவங்களோட சேர்ந்து கொண்டாட இருக்கேன்... மாதவன் வெளிப்படை
சென்னை : நடிகர் மாதவனின் 51வது பிறந்தநாள் வரும் 1ம் தேதி வருகிறது.
இதையொட்டி அவருக்கு முன்னதாகவே ட்விட்டர் மூலம் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் தன்னுடைய பிறந்தநாளை நெருக்கமானவர்களுடன் இணைந்து கொண்டாட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிறப்பான படங்களில் மாதவன்
நடிகர் மாதவன் தன்னுடைய கேரியரில் சிறப்பான படங்களில் நடித்துள்ளார். இவருடைய அலைபாயுதே படம் வெளிவந்த நேரத்தில் அவருக்காக உருகிய பெண் ரசிகைகள் ஏராளம். தொடர்ந்து பல்வேறு சிறப்பான படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான விக்ரம் வேதா, மாறா உள்ளிட்ட படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளன.

தேர்ந்தெடுத்த படங்கள்
தொடர்ந்து தமிழ் மற்றும் இந்தியில் தேர்ந்தெடுத்த படங்களில் மாதவன் நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய 51வது பிறந்தநாளை வரும் ஜூன் 1ம் தேதி கொண்டாடவுள்ளார் மாதவன். இதையொட்டி முன்னதாகவே அவருக்கு அவரது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

தனியாக கொண்டாட விரும்பவில்லை
இதையொட்டி அவரது ரசிகர்களுக்கு அவர் தனது இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய கொரோனா சூழலை கருத்தில் கொண்டு தன்னுடைய பிறந்தநாள் குறித்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் தன்னுடைய பிறந்தநாளை தனியாக கொண்டாட விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நெருக்கமானவர்களுடன் கொண்டாட்டம்
மேலும் தனக்கு மிகவும் நெருக்கமானவர்களுடன் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது ராக்கெட்ரி -தி நம்பி எபெக்ட் படத்தின் ரிலீசிற்காக மாதவன் காத்துள்ளார். அவருடைய எழுத்து மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரெயிலர் சமீபத்தில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











