twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹீரோ வேஷம் நமக்கு செட்டாவாது சார்… அலறும் யோகி பாபு

    |

    Recommended Video

    யோகிபாபுவும் மொட்டை ராஜேந்திரனும் கலக்கும் காவி ஆவி நடுவுல தேவி | Kaavi Aavi Naduvula Devi

    சென்னை: ஹீரோவாக நடிப்பதை விடவும் ஒரு காமெடியனாக மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க வேண்டும் என்பதே எனது ஆசை என்று நடிகர் யோகி பாபு கூறியுள்ளார். பட்லர் பாலு திரைப்படத்தில் யோகி பாபு சமையல்காரராக நடித்துள்ளார். திருமணத்தில் சமையல் வேலைக்கு செல்லும் இடத்தில் மணப்பெண் கடத்தப்படுகிறார். அவரை யோகி பாபு துப்புறிந்து எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது தான் படத்தின் கதை.

    அடைமழையால் குளிரும் பூமி போல பட மழையால் குளிர்ந்து போயிருக்கிறார் யோகி பாபு. ஒரு காலத்தில் நடிகர் நாகேஷ் டைம் டேபிள் போட்டு நடித்து வந்தாரோ. அதே மாதிரி தான் தற்சமயம் யோகி பாபுவும் ஒவ்வொரு நாளையும் டைம் டேபிள் போட்டு ஒவ்வொரு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் ஓடியாடி நடித்துக்கொண்டிருக்கிறார்.

    ஒரு காலத்தில் சினிமாவில் ஒரு காட்சியிலாவது நடித்துவிடமாட்டோமா என்று ஒவ்வொரு ஸ்டுடியோவாக அலையோ அலை என்று அலைந்து திரிந்த மனிதர், இன்றைக்கு பல முன்னணி கதாநாயகர்களை விடவும் படு பிஸியாக இருக்கும் இந்த நிலைமைக்கு அவ்வளவு எளிதில் வந்து விடவில்லை.

    வில்லனின் அடியாள் தோற்றம்

    வில்லனின் அடியாள் தோற்றம்

    முரட்டு தனமான தோற்றம், வில்லனின் அடியாள் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் உருவம், பரட்டை தலை முடி என்று சற்று வித்தியாசமாகவே இருந்தாலும் தனது தன்னம்பிக்கை ஒன்றையே மூலதனமாக வைத்து சினிமா உலகில் சாதித்து காட்டியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

    காமெடிக்கு கியாரண்டி

    காமெடிக்கு கியாரண்டி

    இதற்குத் தானே ஆசைப்பட்டாய் யோகி பாபு என்று சொல்லும் வகையில், ரஜினி, அஜித், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ், விஷால், ஜெயம் ரவி, ஜீவா, சிம்பு என கிட்டத்தட்ட இன்றைய அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துள்ளார். அவரின் வித்தியாசமான முக பாவம், எதார்த்தமான டைமிங்கான டயலாக்குடன் கூடிய நடிப்பு மூலம் முன்னணி காமடி நடிகராக உள்ளார். இவர் ஒரு படத்தில் நடித்தால், நிச்சயம் அந்த படத்தில் நகைச்சுவைக்கு குறைவே இருக்காது என்ற அளவிற்கு அவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.

    தன்னம்பிக்கைக்கு யோகி பாபு

    தன்னம்பிக்கைக்கு யோகி பாபு

    அழகான உருவம், வெள்ளை தோல், ஸ்லிம் பாடி என்று ஹீரோக்களுக்கென்று ஒரு முத்திரை பதிக்கப்பட்ட திரையுலகில் பல ஏச்சுகளுக்கும் பேச்சுகளுக்கும் இடையே காமெடியனாய் கலக்கிய யோகி பாபு தர்மபிரபு, கூர்கா போன்ற திரைப்படங்களின் மூலம் ஹீரோவாக கால் பதித்தார். தன்னம்பிக்கை இழந்தவர்களுக்கு யோகி பாபு நிச்சயம் ஒரு எடுத்துக்காட்டு.

    ஒரே நாள் 4 படம் ரிலீஸ்

    ஒரே நாள் 4 படம் ரிலீஸ்

    அக்டோபர் 11ஆம் தேதி யோகி பாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் வெளியாவது அவரின் வெற்றியை காட்டுகிறது. இருட்டு, பெட்ரோமாக்ஸ், அருவம் மற்றும் பட்லர் பாலு இவை அனைத்தும் அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், சுதிர் எம்.எல் இயக்கத்தில் உருவாகியுள்ள பட்லர் பாலு திரைப்படத்தில் யோகி பாபு கதநாயகனாக நடித்துள்ளார் என்ற செய்தி ஒரு நாளிதழில் வெளியாகியுள்ளது. அந்த செய்தி உண்மையானதல்ல என்று அலறியடித்துக்கொண்டு அதற்கு பதில் அளித்துள்ளார் யோகி பாபு.

    சமையல்காரன்

    சமையல்காரன்

    இந்த படத்தில் மயில்சாமி, தாடி பாலாஜி, ரோபோ ஷங்கர், இமான் அண்ணாச்சி என ஒரு நகைச்சுவை பட்டாளமே நடித்துள்ளது. அவர்களோடு சேர்ந்து நானும் கல்யாண வீடுகளில் சமையல் வேலை செய்யும் சமயல்காரராக காமடியனாகவே நடித்துள்ளேன். அதுவும் வெறும் 4 நாட்கள் மட்டுமே நடித்தேன் என்றுள்ளார். அதனால் அப்படத்தில் நான் ஹீரோவாக நடித்துள்ளேன் என்று குறிப்பிடுவது தவறான செய்தி.

    என்னுடைய ஸ்டைல்

    என்னுடைய ஸ்டைல்

    மேலும் யோகி பாபு அப்படத்தில் பேசிய அனைத்து நகைச்சுவை வசனங்களையும் எழுதியது இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார் என்று செய்தி வெளியாகியுள்ளது. அந்த செய்தியையும் மறுத்துள்ளார் யோகி பாபு. நான் பேசும் நகைச்சுவை வசனங்கள் அனைத்தும் இயக்குனர் கொடுக்கும் வசனங்களுக்கு தகுந்தாற்போல் என்னுடைய ஸ்டைலில் மாற்றிக்கொள்வேன். மற்றபடி யாரும் எனக்கு எந்த வசனங்களும் கொடுக்கவில்லை என்று மறுத்துள்ளார் யோகி பாபு.

    துப்பறியும் பட்லர் பாலு

    துப்பறியும் பட்லர் பாலு

    பட்லர் பாலு திரைப்படத்தில் யோகி பாபு சமயல்காரராக செல்லும் ஒரு திருமணத்தில் மணப்பெண் கடத்தப்படுகிறார். அவரை யோகி பாபு துப்புறிந்து எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது தான் படத்தின் கதை. யோகி பாபு தான் ஹீரோவாக நடிப்பதை விடவும் ஒரு காமெடியனாக மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க வேண்டும் என்பதே எனது ஆசை என்றும் தெரிவித்துள்ளார்.

    English summary
    Yogi Babu plays a religious role in 'Butler Balu'. Yogi Babu said that he wanted to make people laugh as a comedian rather than acting as a hero.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X