twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமாவில் ஒரே மாதிரியான கேரக்டர் நடிப்பது ரொம்பவே போர் - காளி வெங்கட்

    |

    சென்னை: எனக்கு வித விதமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை. ஒரு படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தால் மறுபடியும் அதே போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புகள் வருகிறது.

    ஆனால் எனக்கு அதே கேரக்ட்டரில் தொடர்ந்து நடிக்க விருப்பமில்லை. இது எனக்கு மட்டும் அல்ல அனைத்து நடிகர்களுக்கும் இது பொருந்தும் என்று கூறியுள்ளார் மெர்சல் ஆட்டோக்காரர் காளி வெங்கட்.

    I want to Play variety Roles-Kaali Venkat

    மெர்சல் படத்தில் ஆட்டோ டிரைவர் கதாபாத்திரத்தில் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்தவர் காளி வெங்கட். பிறந்தது படித்தது எல்லாம் கோவில்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் தான். நடிப்பு மீது இருந்த ஆர்வத்தால் 1997ஆம் ஆண்டில் சென்னைக்கு வந்து பல தரப்பட்ட வேலைகளை செய்து வந்துள்ளார்.

    அப்போது அவருக்கு இயக்குநர் விஜய் பிரபாகரனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் காளி வெங்கட் வாழ்வில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. இன்று வரை அவரையே குரு என்று மனதார ஏற்றுக்கொண்டுள்ளார்.

    அவரின் முதல் பட வாய்ப்பும் விஜய் பிரபாகரனால், தசையினை தீ சுடும் என்ற படம் மூலம் தான் கிடைத்தது. இருப்பினும் சில காரணங்களால் அப்படம் வெளிவராமல் போனது. அப்படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு காளி என்று பெயரிடப்பட்டதால் அதுவே அவரின் திரையுலக பெயராக ஒட்டிக்கொண்டது.

    I want to Play variety Roles-Kaali Venkat

    கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குநர் எனும் நிகழ்ச்சியின் 3வது சீனில் அந்த தொடருக்கான சிறந்த நடிகர் என்ற பட்டத்தை வென்றதன் மூலம் அவருக்கு பல திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின. கலகலப்பு, உதயம் NH4, முண்டாசுப்பட்டி, ஈட்டி, கோடி, மிருதன், தெகிடி, தெறி என பல படங்களில் பல விதமான குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

    மாரி படத்தில் கான்ஸ்டபிள், இறுதி சுற்று படத்தில் கதாநாயகியின் தந்தையாகவும் அவர் நடித்த கதாபாத்திரங்கள் மூலம் மிகவும் பிரபலமானார். தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்ததன்
    மூலம் படு பிஸியான நடிகராக மாறிவிட்டார் காளி வெங்கட்.

    சமீபத்தில் பல திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகப்போகிறது என்ற சந்தோஷத்தில் மிதக்கிறார். தெலுங்கில் டாப்ஸி நடிப்பில் வெளியான அனந்தோ பிரம்மா என்று ஹாரர் படத்தை சற்று மாற்றி தமிழில் பெட்ரோமாக்ஸ் என்று ஹாரர் மற்றும் எமோஷன் கலந்த ரீமேக் செய்துள்ளார் ரோஹின்.

    இப்படத்தில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் இணைந்து நடித்தது, ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. மேலும் அந்த படத்தில் சத்யன், யோகி பாபு, முனிஷ் காந்த், டி.எஸ்.கே என ஒரு நகைச்சுவை பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. அவர்களுடன் நடித்த இந்த படம் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இதுவரையில் நகைச்சுவை, குணச்சித்திரம், ரியாக்ஷன், டயலாக் பேசி வந்தவரை முதல் முறையாக ஸ்டண்ட் செய்ய வைத்துள்ளார்கள். இப்படம் அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    அதனைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சூரரை போற்று திரைப்படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்தது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது என்றார். சுதா மேடம் உடன் ஏற்கனவே இறுதி சுற்று திரைப்படத்தில் பணிபுரிந்ததால், அவரைப் பற்றி நன்றாக தெரிந்ததால் அவருடன் இணைந்து இந்த படத்தில் பணிபுரிவது எளிதாக இருந்தது.

    இறுதி சுற்று திரைப்படம் வெளியாகி இடைவெளி விட்டு இப்படத்தை இயக்குவதால் அவரது ஸ்கிரிப்ட் மிகவும் ஸ்ட்ராங்கா இருந்தது. இப்படத்தின் கதாநாயகி அபர்ணா பாலமுரளி உடன் நடித்தது ஒரு புதிய அனுபவம். மிகவும் திறமையான நடிகை. இப்படத்திற்கு பிறகு அவருக்கு பல பட வாய்ப்புகள் நிச்சயம் அமையும் என்றார் காளி வெங்கட்.

    எனக்கு வித விதமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை. ஒரு படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தால் மறுபடியும் அதே போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புகள் வருகிறது. ஆனால் எனக்கு அதே கேரக்ட்டரில் தொடர்ந்து நடிக்க விருப்பமில்லை. இது எனக்கு மட்டும் அல்ல அனைத்து நடிகர்களுக்கும் இது பொருந்தும் என்றார்.

    இது தவிர யங் மங் சங், டைட்டானிக், ரேஞ்சர், பற பற பற, 1945 என மேலும் பல படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட்டில் அமீர் கான் நடிக்கும் ரீமேக் படம் ஒன்றில் நடிப்பதற்காக ஆடிஷன் நடைபெற்றது. அதில் வெற்றி பெறவில்லை என்றாலும் அந்த வாய்ப்பு கிடைத்ததையே பெரிய பாக்கியமாக கருதுகிறார் காளி வெங்கட். ஒரு குணச்சித்திர நடிகர் இந்த அளவிற்கு பிரபலமானதற்கு

    அவருடைய திறமை மீது அவருக்கு இருந்த நம்பிக்கை தான் காரணம். அவருக்கு மேலும் பல படங்கள் அமைத்து திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பெற வாழ்த்துக்கள்.

    English summary
    I wanted to play a variety of roles. If you play a character in a movie, you get the opportunity to play the same role again. But I don't want to continue playing the same character. This is not just for me but for all actors, said. Kaali Venkat.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X