twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அழகு, திறமை தேவைதான்.. அந்த விஷயத்துலயும் கவனம் செலுத்துங்க.. நடிகர், நடிகைகளுக்கு அட்வைஸ்!

    By
    |

    சென்னை: அழகு, திறமையில் கவனம் செலுத்தும் நடிகர், நடிகைகள் அந்த விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

    நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பிறகு மன ஆரோக்கியம் பற்றிய பேச்சு, தலை தூக்கியுள்ளது.

    இதுபற்றி பலர் பேசி வருகின்றனர். கொரோனா லாக்டவுனால் மக்கள், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

    மெர்சல்டா டோய்.. 80 கிலோ தூக்கி ஸ்குவாட் போட்ட திஷா பதானி.. காதலரின் ரியாக்ஷனை பாருங்க!மெர்சல்டா டோய்.. 80 கிலோ தூக்கி ஸ்குவாட் போட்ட திஷா பதானி.. காதலரின் ரியாக்ஷனை பாருங்க!

    நடிகை ஸ்ருதிஹாசன்

    நடிகை ஸ்ருதிஹாசன்

    பொருளாதார இழப்பு மற்றும் வேலை இழப்பு காரணமாக பலர் கஷ்டங்களை சந்தித்து வரும் நிலையில் மன ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நடிகர் நடிகைகளும் பேசி வருகின்றனர். நடிகை ஸ்ருதிஹாசன், 'இந்த லாக்டவுனில் மன ஆரோக்கியம்தான் மக்களின் உண்மையான பிரச்னை என கருதுகிறேன். கடந்த மூன்று வருடங்களாக இதற்கானச் சிகிச்சையில் இருக்கிறேன்' என்று கூறியிருந்தார்.

    வெட்கப்பட ஒன்றுமில்லை

    வெட்கப்பட ஒன்றுமில்லை

    நடிகை பாயல் கோஷ், தானும் மன அழுத்தத்துக்காக சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார். தனுஷின் கர்ணன் பட நடிகை ரஷிஜா விஜயன், தானும் மன ஆரோக்கியத்துக்கு சிகிச்சை எடுத்ததாகத் தெரிவித்து இருந்தார். அவர் கூறும்போது, எனக்கும் இந்தப் பிரச்னை இருந்தது. சிகிச்சை எடுத்துக்கொண்டேன். தேவைப்பட்டால் மனநல மருத்துவரை சந்தியுங்கள். இதில் வெட்கப்பட ஒன்றுமில்லை என்று கூறியிருந்தார்.

    லாவண்யா திரிபாதி

    லாவண்யா திரிபாதி

    இந்நிலையில், நடிகை லாவண்யா திரிபாதியும் மன ஆரோக்கியம் பற்றி பேசியுள்ளார். இவர். தமிழில், சசிகுமாரின் பிரம்மன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர். சி.வி.குமார் இயக்கத்தில் வெளியான மாயவன் படத்திலும் நடித்திருந்தார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் அவர், லாக்டவுன் காலத்தில் ஐதராபாத்தில் தங்கி இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் டேராடூன் சென்ற அவர், தனது பெற்றோருடன் இணைந்துள்ளார்.

    முக்கியத்துவம்

    முக்கியத்துவம்

    'கடந்த சில மாதங்களாக நடிகர்களின் தற்கொலை செய்திகளை கேட்கிறேன். தோற்றத்திலும் திறமையிலும் கவனம் செலுத்தும் நடிகர்கள், மன ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். எனது அழகான, இளமையான, புத்திசாலித்தனமான உறவினர் ஒருவரும் தற்கொலையால் உயிரிழந்துள்ளார். இதனால் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் பற்றி எனக்குத் தெரியும்.

    அந்தப் பயம்தான்

    அந்தப் பயம்தான்

    நான் வீட்டுக்கு வந்து பெற்றோர் மற்றும் உறவினரை சந்திக்கும் முன் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்துகொண்டேன். நெகட்டிவ் என்று முடிவு வந்தது. இருந்தாலும் சில நாட்கள் வீட்டுக்குள் மாஸ்க்குடன் தான் அலைகிறேன். அதைக் கழற்றவில்லை. என்னால் மற்றவர்களுக்கு ஏதும் ஆகிவிடக் கூடாது என்கிற பயம்தான் என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Even after testing negative for Covid-19, I was afraid to take my mask off: Lavanya Tripathi
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X