“தயவு செஞ்சு மறுபடியும் நடிக்கவே நடிக்காதீங்க”... சிம்பு நாயகிக்கு ரசிகர்கள் சொன்ன அட்வைஸ்!

சென்னை: சிம்பு ஜோடியாக அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்து வரும் மலையாள நடிகை மஞ்சிமா மோகன், தனது முதல் படத்தில் தனக்குக் கிடைத்த எதிர்மறையான விமர்சனங்கள் குறித்து பேட்டியொன்றில் மனம் திறந்துள்ளார்.

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வரும் மற்றொரு அழகான நாயகி மஞ்சிமா மோகன். கவுதம் மேனன் இயக்கும் அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்பு நாயகியாக அறிமுகமாகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே சமயத்தில் படமாகிறது.

I Was Asked To Quit Acting, Says Manjima Mohan

தமிழில் சிம்பு, தெலுங்கில் நாக சைதன்யா நாயகனாக நடிக்கின்றனர். ஆனால், இரண்டு படத்திலும் மஞ்சிமா தான் நாயகி.

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த மஞ்சிமா, பின்னர் நிவின் பாலியுடன் ஒரு வடக்கன் செல்பி மூலம் நாயகியானார். அதனைத் தொடர்ந்து கவுதம் மேனன் பட வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

இந்நிலையில், ஒரு வடக்கன் செல்பி பட ரிலீசுக்குப் பிறகு தான் சந்தித்த கசப்பான அனுபவங்கள் குறித்து பேட்டியொன்றில் மனம் திறந்துள்ளார் மஞ்சிமா. அதில் அவர், "ஒரு வடக்கன் செல்பியைப் பார்த்த பலர் சமூகவலைதளப் பக்கங்களில் நான் நடிப்பில் இருந்து விலகி விடுவது நல்லது என எனக்கு அறிவுறுத்தினர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய எனக்கு எமோஷனல் காட்சிகளில் நடிப்பது கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்தது. ஆனால், இத்தகைய விமர்சனங்களை நான் எதிர்கொண்ட போது, படக்குழு எனக்கு உறுதுணையாக இருந்தது. அவர்களுக்கு என் நடிப்பு திருப்திகரமாக இருந்ததாக பதிலடி கொடுத்தனர்" எனத் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X