காதலில் ஏமாற்றப்பட்டேன்.. அந்த துரோகம் வேதனையானது.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்!

By

சென்னை: காதலில் இருக்கும்போது தான் ஏமாற்றப்பட்டதாக பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி கூறியுள்ளார்.

Recommended Video

Aari or Bala? Who is the hero | BIG BOSS TAMIL | Filmibeat Tamil

தமிழில், செல்வா இயக்கத்தில், பிரபுதேவா, பார்த்திபன், கவுசல்யா நடித்த படம், ஜேம்ஸ்பாண்டு.

இதில் இன்னொரு ஹீரோயினாக நடித்திருந்தவர் ரேணு தேசாய். பின்னர் தெலுங்கில் சில படங்களில் நடித்தார்.

பவன் கல்யாண்

பவன் கல்யாண்

பவன் கல்யாண் ஜோடியாக, பத்ரி, ஜானி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்தார். இஷ்க் வாலா லவ் என்ற மராத்தி படத்தைத் தயாரித்து இயக்கினார். பவன் கல்யாணுடன் நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பின்னர் அவரைத் திருமணம் செய்துகொண்டார். சில படங்களில், பவன் கல்யாணின் காஷ்ட்யூம் டிசைனராகவும் பணியாற்றினார்.

தெரிவிக்கவில்லை

தெரிவிக்கவில்லை

இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். பின்னர் பவன் கல்யாணுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் ரேணு, இன்னொருவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கடந்த சில வருடங்களுக்கு முன் கூறப்பட்டது. ஆனால் அதுபற்றி பின்னர் அவர் ஏதும் தெரிவிக்கவில்லை.

வாங்கிக் கொடுக்கலை

வாங்கிக் கொடுக்கலை

அவருக்கு நடிகர் பவன் கல்யாண், ரூ. 5 கோடிக்கு வீடு வாங்கி கொடுத்ததாக சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதை மறுத்த ரேணு, நான் என் சொந்த பணத்தில் வீடு வாங்கியிருக்கிறேன், யாரும் எனக்கு வாங்கிக் கொடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.

கொடுங்கனவு

கொடுங்கனவு

இந்நிலையில், தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அப்போது ஒரு ரசிகர் காதல் பற்றி கேள்வி கேட்டார். அதற்குப் பதிலளித்த ரேணு தேசாய் கூறியதாவது: காதல் வெற்றியடையும் போது இனிமையானதாக இருக்கிறது. தோல்வி அடையும்போது அது கொடுமையான கனவாக மாறிவிடும்.

காதல் தோல்வி

காதல் தோல்வி

வாழ்க்கையில், காதல் என்பது ஒரு பகுதி மட்டுமே. மொத்த வாழ்க்கையுமே காதலில் மட்டும் இல்லை. இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதனால் காதல் தோல்வி அடையும்போது தற்கொலை போன்ற அவசர முடிவுகளை யாரும் எடுக்க வேண்டாம். அந்த வேதனைகளையும் கடந்து வரவேண்டும்.

காதல் துரோகம்

காதல் துரோகம்

யாராவது ஒருவர் உங்களைத் தூக்கி எறியும்போது, ஏற்படுகிற வலியை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது என்பது உண்மைதான். இருந்தாலும் அதில் இருந்து மீண்டு வரவேண்டும். நானும் அதுபோன்ற காதல் துரோகத்தை நானும் எதிர்கொண்டிருக்கிறேன். மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் அந்த வலியில் இருந்து வெளியேற முடியும். இவ்வாறு ரேணு தேசாய் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X