‘எஸ்.ஜே.சூர்யாவுடன் நடிக்கத் தயங்கினேன்’.. மேடையில் உண்மையைச் சொன்ன ப்ரியா பவானிசங்கர்!

எஸ்.ஜே.சூர்யாவுடன் நடிக்கத் தயங்கியதாகத் தெரிவித்துள்ளார் ப்ரியா பவானிசங்கர்.

Recommended Video

‘எஸ்.ஜே.சூர்யாவுடன் நடிக்கத் தயங்கினேன்’.. மேடையில் உண்மையைச் சொன்ன ப்ரியா பவானிசங்கர்!- வீடியோ

சென்னை: மான்ஸ்டர் படத்தில் எஸ்.ஜே. சூர்யாவுடன் நடிக்க முதலில் தான் தயங்கியதாக நடிகை ப்ரியா பவானிசங்கர் தெரிவித்துள்ளார்.

எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானிசங்கர், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மான்ஸ்டர். 'ஒரு நாள் கூத்து' திரைப்படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் தான் இப்படத்தின் இயக்குனர்.

பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள மான்ஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானிசங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய ப்ரியா, எஸ்.ஜே.சூர்யாவுடன் நடிக்க முதலில் தான் தயங்கியதாகக் கூறினார்.

எனது சொந்தப்படம்:

எனது சொந்தப்படம்:

இதுகுறித்து அவர் பேசியதாவது, " இந்த படம் என்னுடைய படம். எனவே யாருக்கும் நான் நன்றி சொல்லப் போவதில்லை. இதை நான் என்னுடைய சொந்தப்படமாகத்தான் நினைக்கிறேன்.

ஆரம்பத்தில் தயக்கம்:

ஆரம்பத்தில் தயக்கம்:

எஸ்.ஜே.சூர்யா படம் என்றதும் முதலில் நான் தயங்கினேன். நானும் அவர் படங்களை பார்த்திருக்கிறேன் அல்லவா. இது எனக்கு செட்டாகுமா என நெல்சனிடம் கேட்டேன். அவர் கதையை சொன்ன பிறகு தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்பு மொத்தம் 25 நாட்கள் நடந்தது. அத்தனை நாட்களும் கலகலப்பாக சென்றது.

கோபக்காரர் இல்லை:

கோபக்காரர் இல்லை:

எஸ்.ஜே.சூர்யாவை பார்த்து எந்த அளவுக்கு நான் பயந்தேனோ, அதற்கு நேர்மாறாக அவர் நடந்துகொண்டார். எஸ்.ஜே.சூர்யா கோபக்காரர் என உதவி இயக்குனர் கூறினார். ஆனால் ஒரு நடிகராக அவர் அப்படி இல்லை.

நிறைய கதை:

நிறைய கதை:

படப்பிடிப்பின் போது எஸ்.ஜே. சூர்யா நிறைய கதை சொல்லுவார். அவர் உதவி இயக்குனராக இருந்ததில் இருந்து, இப்போது நடிகராக வலம் வருவது வரையிலான கதைகளை சுவாரஸ்யமாகக் கூறுவார். அவர் பேசும் போது சிரிக்காமல் இருக்கவே முடியாது", என ப்ரியா கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X