என்ன ரொம்ப கேவலப்படுத்தினாங்க..சந்தேகப்பட்டாங்க.. விவாகரத்துக்கு காரணம் சொன்ன வி ஜே மகேஸ்வரி!

சென்னை: 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் தொகுப்பாளனி என்றால் அதில் வி ஜே மகேஸ்வரியும் ஒருவர் .

பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய வி.ஜே மகேஸ்வரி திருமணத்திற்கு பிறகு டிவியில் முகம் காட்டாமலேயே இருந்தார்.

விவாகரத்துக்கு பிறகு திரும்பவும் நடிக்க வந்திருக்கும் வி ஜே மகேஸ்வரி தனது திருமண வாழ்க்கையில் அனுபவித்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

பிரபலமான மகேஸ்வரி

பிரபலமான மகேஸ்வரி

சென்னையில் பிறந்து வளர்ந்த வி ஜே மகேஸ்வரி, பல முன்னணி சேனல்களில், விஜேவாகவும், சீரியல்களிலும் நடித்து வந்தார். இவர் தொகுத்து வழங்கிய பல நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமானவை. சன் டிவியில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் சிறந்த என்டர்டைனராக இருந்து வந்தார். வி ஜே மகேஸ்வரி,ஆனந்த கண்ணன், அனிஷா, ப்ரஜின் போன்ற பலரும் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் தொகுப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுப்பாடு விதித்த திருமண வாழ்க்கை

கட்டுப்பாடு விதித்த திருமண வாழ்க்கை

திருமணத்திற்கு பிறகு மீடியாவை விட்டு ஒதுங்கி இருந்த வி ஜே மகேஸ்வரி தான் சந்தித்த இன்னல்களை வெளிப்படையாக கூறியுள்ளார். தன் கணவர் வீட்டில் தன்னை மிகவும் அடிமைப்படுத்தியதாகவும், நண்பர்களுடன் பழக கூடாது பிரண்ட்ஷிப்பை பிரித்ததாகவும், எந்த ஆண்களுடனும் நடிக்க கூடாது,சீரியல்களில் நடிப்பதை நிரீதியாதாகவும், அதனால் வெறும் விஜேவாக மட்டும் தான் இருந்தேன் என்று கூறியுள்ளார் அப்பாடி மீறி சீரியல்களில் நடித்தால் குடும்பத்து மானம் போய்விடும் என்று கட்டுப்பாடு விதித்ததுடன், பல பிரச்சனைகளையும் கொடுத்தனர்

 பினான்சியலாக கஷ்டப்பட்ட மகேஸ்வரி

பினான்சியலாக கஷ்டப்பட்ட மகேஸ்வரி

இப்படி கட்டுப்பாடுகள் பல போட்டதால், பினான்சியல் ஆக தான் மிகவும் கஷ்டப்பட்டதாகவும் கூறியுள்ளார் வி ஜே மகேஸ்வரி. தன் அம்மாவிற்கு இவர் செய்யும் சிறு உதவிகள் கூட செய்யக்கூடாது என்று கூறிவிட்டதாக கூறியுள்ள இவர், பல கொடுமைகளையும் அனுபவித்ததாகவும், தன்னை சந்தேகப்பட்டதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளார். தன் அம்மாவின் செலவிற்கு காசு கொடுத்து வந்த வி ஜே மகேஸ்வரியை, தடுத்து இனி காசு கொடுக்கக் கூடாது என்று கூறி விட்டதாகவும், இதனால் தன் அம்மா வீட்டு வேளைக்கு செல்ல முடிவு எடுத்ததாகவும் கூறியுள்ளார். இத்தனை வருடங்கள் என்னை கஷ்டப்பட்டு வளர்த்த என் அம்மாவை நான் எப்படி வீடு வேலைக்கு அனுப்ப முடியும், இதுவே அவர்கள் அப்படி செய்ய விட்டுவிடுவார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு

பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு

இந்த பிரச்சனைகளில் இருந்து தன்னை விடுவித்து கொள்ள விவாகரத்து முடிவை எடுத்ததாக கூறியுள்ளார் மகேஸ்வரி. விவாகரத்துக்கு பிறகு தான் நிம்மதியாக இருப்பதாகவும், விவாகரத்துக்கு பிறகு மீண்டும் நடிக்க துவங்கியதையும், பகிர்ந்துள்ளார் மகேஸ்வரி. இவருக்கு கேஷவ் என்ற ஒரு மகன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. சமீககாலமாக பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வரும் மகேஸ்வரி, விக்ரம் படத்திலும் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்திருந்தார். தற்போது சமூகவலைத்தளங்களில் பிஸியாகவே இருந்து வரும் இவர், சமீபகாலமாக வெளியிடும் புகைப்படங்கள் வைரலாக பரவுவதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X