3 வருஷம் புருஷன் பொண்டாட்டியா இருந்தோம்..இப்போ என்ன வந்தது.. தர்ஷனால் கண்ணீர் விடும் சனம் ஷெட்டி!

Recommended Video

Vanitha Vijaykumar blasts Tharshan | Sanam Tharshan | Bigg Boss 3

சென்னை: மூன்று வருடம் தர்ஷன் தனக்கு கணவனாகவும், தர்ஷனுக்கு தான் மனைவியாகவும் இருந்ததாகவும் நடிகை சனம் ஷெட்டி கண்ணீர்மல்க கூறியுள்ளார்.

நடிகை சனம் ஷெட்டி இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 20 படங்களில் நடித்திருக்கிறார். கடந்த சில நாட்களாக அதிகம் செய்திகளில் அடிப்பட்டு வருகிறார் சனம் ஷெட்டி.

தன்னுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்த தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய பிறகு தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக போலீஸில் புகார் அளித்தார். மேலும் தன்னுடன் நடிக்கும் நடிகர்களுடன் சேர்த்து வைத்து தன்னை தவறாக பேசுவதாகவும் தெரிவித்தார்.

தர்ஷன் குற்றச்சாட்டு

தர்ஷன் குற்றச்சாட்டு

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தர்ஷன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சனம் ஷெட்டி மீது சரமாரி குற்றச்சாட்டுக்களை கூறினார் தர்ஷன். அதாவது முன்னாள் காதலருடன் சனம் ஷெட்டி இரவு முழுக்க பார்ட்டியில் இருந்தார். தன்னை வைத்து படம் பண்ண இருந்த தயாரிப்பாளர்களிடம் தன்னைப் பற்றி தவறாக பேசி தனது வாழ்க்கையை கெடுக்க பார்த்ததார்.

சனம் ஷெட்டி பதில்

சனம் ஷெட்டி பதில்

பிகினியில் போட்டோ ஷுட் நடத்தினார். இதெல்லாம் தனக்கு பிடிக்கவில்லை. இதன்காரணமாக அவரை பிரேக்கப் செய்ய முடிவு செய்தேன். இனியும் அவரை என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக கூறினார். தர்ஷனின் பேட்டி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் தர்ஷன் கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக சனம் ஷெட்டி ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

புட்டு புட்டு வைத்த சனம்

புட்டு புட்டு வைத்த சனம்

அதில் தர்ஷனுக்கும் தனக்குமான உறவு பிக்பாஸ் நிக்ழ்ச்சிக்கு முன்பு எப்படி இருந்தது தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன்பு எப்படி இருந்தார்? இப்போது எப்படி இருக்கிறார் என புட்டு புட்டு வைத்துள்ளார். அதன்படி மூன்று ஆண்டுகளாக தானும் தர்ஷனும் கணவன் மனைவியாக இருந்ததாக கூறியிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பு வரை தன்னுடன் அன்பாகவும் நெருக்கமாகவும் இருந்த தர்ஷன் வெளியே வந்த பிறகு அடியோடு மாறிவிட்டார்.

நீ எனக்கு வேண்டாம்

நீ எனக்கு வேண்டாம்

நீ எனக்கு வேண்டாம், ஏன் என் பின்னால் சுற்றுகிறாய் என கேட்டார். பிக்பாஸை விட்டு வெளியே வந்து 8 மாதங்கள் ஆகியும் என்னை வந்து பார்க்கவில்லை. என்னிடம் பேசவில்லை. நான் அவரை வைத்து படம் பண்ணாதீர்கள் என்று யாரிடமும் சொல்லவில்லை. அவரிடம் பேசி எனக்கு நியாயம் பெற்றுக்கொடுங்கள் என்றுதான் ஒரே ஒரு தயாரிப்பாளரிடம் பேசினேன். அதுவும் அவர் எனக்கு நெருக்கமானவர் என்பதால் தான்.

தர்ஷன் சொல்வது பொய்

தர்ஷன் சொல்வது பொய்

தர்ஷன் கூறுவது போல் மலேசியா செல்ல கோஆர்டினேட்டரிடம் டிக்கெட் புக் செய்யசொல்லவில், நான்தான் என் பணத்தில் டிக்கெட் புக் செய்தேன். ஹோட்டலில் ரூமும் புக் செய்தேன். ஆர்கனைஸரிடம் எந்த ஃபிளைட் எந்த ஹோட்டல் என கேட்கதான் பேசினேன். மற்றப்படி அவர்கள் செலவில் எதுவும் செய்துகொள்ளவில்லை. எல்லாமே என் பணத்தில்தான் செய்து கொண்டேன்.

சொன்னதே அவர்தான்

சொன்னதே அவர்தான்

பிகினி போடுவது பிடிக்கவில்லை என்று கூறுகிறார். 2017ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் ஒன்றாக இருந்தோம். அப்போது பிகினியில் என்னை போட்டோ எடுத்ததே அவர்தான். அதனை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்ய சொன்னார். அந்த போட்டோக்களை லைக் செய்தார். அதற்கெல்லாம் ஆதாரம் உள்ளது. எனக்கு நீதி வேண்டும்.

கண்ணீர்விடும் சனம்

கண்ணீர்விடும் சனம்

இனிமேல் அவரை திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. என்னை போல் இனி வேறு பெண்கள் யாரும் பாதிக்கப்படக்கூடாது. சட்டப்படி அவருக்கு என்ன தண்டனை கிடைக்க வேண்டுமோ அது கிடைக்க வேண்டும். என் எதிர்காலமே பாழாகி விட்டது. என் குடும்பத்தின் நிம்மதி போய்விட்டது. என் அப்பாவுக்கு இதனாலேயே கடந்த மாதம் ஹாட் அட்டாக் வந்து விட்டது என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார் சனம் ஷெட்டி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X