ஐஸ்வர்யா ராய் படத்தில் என்னை தவறாக பயன்படுத்திவிட்டார்கள்: 'ரீல்' ஷகீலா சேச்சி குமுறல்
மும்பை: ஐஸ்வர்யா ராயின் சரப்ஜித் படத்தில் தன்னை தவறாக பயன்படுத்திவிட்டதாக நடிகை ரிச்சா சட்டா தெரிவித்துள்ளார்.
ஷகீலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார் ரிச்சா சட்டா. சினிமா பின்னணி இல்லாமல் நடிக்க வந்து போராடி பாலிவுட்டில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் சினிமா பற்றி கூறியதாவது,

தீபிகா
ஒரு படம் ரூ. 100 கோடி வியாபாரம் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் விரும்பினால் தீபிகா படுகோனே போன்றவரை நடிக்க வைப்பார். அதற்கான காரணத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

நடிப்பு
நான் பணம் சம்பாதிக்க இங்கு வரவில்லை. நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் எனக்கென்று தனி முத்திரை பதிக்க விரும்புகிறேன். சரப்ஜித் படத்தில் மட்டும் என்னை தவறாக பயன்படுத்திவிட்டார்கள். அந்த படத்தில் ஏன்டா நடித்தோம் என்று தோன்றுகிறது.

கதாபாத்திரம்
ராம் லீலா படத்தில் நடித்தது சிறந்த அனுபவம். என் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. நான் கதாபாத்திரத்தின் தரத்தை தான் பார்க்கிறேனே தவிர எவ்வளவு பணம் வரும் என்பதை அல்ல.

ரிஸ்க்
கேங்ஸ் ஆப் வாசீபூர் படத்தில் 24 வயது நபருக்கு தாயாக நடித்தது ரிஸ்க் தான். ரிஸ்க் என்று தெரிந்தும் நடித்த என்னை யாருமே பாராட்டவில்லை. என் வயதை விட நான் கூடுதல் வயதானவர் போன்று தெரிவதாக பலர் நினைக்கிறார்கள். ஆனால் ஒரு நடிகையாக எனது திறமையை அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர்.

ரித்திக் ரோஷன்
அக்னிபத் படத்தில் ரித்திக் ரோஷனின் தாயாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. வயதில் சிறியவளான என்னை போய் அவருக்கு தாயாக நடிக்க அழைத்தது முட்டாள்தனம். அனைவருக்கும் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் ஆனால் அந்த வாய்ப்பை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம் என்கிறார் ரிச்சா.


Click it and Unblock the Notifications











