முத்தக்காட்சியில் நடிக்கும் போது படபடப்பாக இருந்தது.. காலங்களில் அவள் வசந்தம் நாயகன் ஓபன் டாக்!
சென்னை: அறம் எண்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் ராகவ் மிர்தத் இயக்கத்தில் நடிகை அஞ்சலி நாயர், அறிமுக நடிகர் கௌசிக் ராம், நடிகை ஹிரோஷினி நடிப்பில் உருவாகியுள்ள படம் காலங்களில் அவள் வசந்தம்.
இத்திரைப்படம் தியேட்டரில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் கௌசிக் ராம் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

சந்தோஷமாக இருக்கிறேன்
கேள்வி: காலங்களில் அவள் வசந்தம் படத்தில் நடித்தது குறித்து...
பதில்: இப்படி ஒரு படம் பண்ண வேண்டும் என்று விரும்பினேன். அதற்கான வாய்ப்பு எனக்கு இந்த படம் மூலம் கிடைத்துள்ளது. எல்லோருக்கும் பிடித்த மாதிரி ஒரு விஷயம் செய்திருக்கிறோம் என்பதை நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ரசிகர்களிடம் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றார்.

லென்ஸ் போடுவேன்
கேள்வி: நடிகை அஞ்சலி, ஹிரோஷினியிடன் நடித்த அனுபவம் எப்படியிருந்தது?
பதில்: எனது கண்கள் இயல்பானது தான். சில சமயங்களில் எனது கண்களுக்கு லென்ஸ் போடுவேன் என்றார். நடிகை அஞ்சலி, ஹிரோஷினி ஆகியோர் ரொம்ப திறமையானவர்கள். ரொம்ப சீனியர்ஸ். ரொம்ப ஃப்ரெண்ட்லியாக இருந்தார்கள். அதனால் அவர்களுடன் நடிப்பதற்கு ரொம்ப Comfortable ஆக இருந்தது.

என்னுடைய பேவரைட்
கேள்வி: நீங்கள் எந்த மாதிரியான படங்களில் நடிக்க ஆசைப்படுவீர்கள்?
பதில்: என்னுடைய பேவரைட் Rom. Com. நாம் 2.30 மணி நேரம் சினிமாவிற்கு செலவிடுவது என்பது சோகத்தை மறந்து சந்தோஷமாக சிரித்து கொண்டு இருக்க வேண்டும் என்பதற்காக தான். அது தான் எனக்கு பிடிக்கும். இனிவரும் படங்கள் ஆக்ஷன் படமாக இருந்தாலும் சரி, வேறு எந்த த்ரில்லர், ஆக்ஷனாக இருந்தாலும் நல்லபடி செய்வேன் என்றார்.

ஸ்டண்ட் யூனியனுக்கு நன்றி
கேள்வி: படத்தின் சண்டைக்காட்சிகள் குறித்து நீங்கள் கூற விரும்புவது?
கேள்வி: நீங்கள் எந்த மாதிரியான படங்களில் நடிக்க ஆசைப்படுவீர்கள்?
பதில்: என்னுடைய பேவரைட் Rom. Com. நாம் 2.30 மணி நேரம் சினிமாவிற்கு செலவிடுவது என்பது சோகத்தை மறந்து சந்தோஷமாக சிரித்து கொண்டு இருக்க வேண்டும் என்பதற்காக தான். அது தான் எனக்கு பிடிக்கும். இனிவரும் படங்கள் ஆக்ஷன் படமாக இருந்தாலும் சரி, வேறு எந்த த்ரில்லர், ஆக்ஷனாக இருந்தாலும் நல்லபடி செய்வேன் என்றார்.

படபடப்பு
கேள்வி: படத்தில் இடம்பெற்றுள்ள லிப்லாக் காட்சி குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: Poetic காட்சியாக லிப்லாக் இருக்கும். ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று இயக்குநரிடம் கேட்டேன். திருமணம் முடிந்த தம்பதிகளின் காதல் தான் படத்தின் மையக்கரு. அதனால் இந்த காட்சி நன்றாக வரும் என்றார். மேலும் நடிகை அஞ்சலிநாயருக்கு சரி என்றால், எனக்கும் சரி என்றேன். நீங்கள் இந்த கேள்வி கேட்கும்போதே படபடப்பு வருகிறது. அப்படியென்றால் நான் எவ்வாறு நடித்திருப்பேன் என்று பார்த்துக் கொள்ளுங்கள். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் இந்த காட்சிகள் வைக்கப்படவில்லை என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/ahmtkq0XvAw இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.


Click it and Unblock the Notifications











