நான் அவன் இல்லை.. மகா கும்பமேளாவில் நீராடினேனா? கடுப்பான நடிகர் பிரகாஷ் ராஜ்!
சென்னை: 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கி 45 நாட்கள் நடக்க இருக்கிறது. இந்த கும்பமேளாவின் போது பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். இதில் நீராடுவதற்காக கோடிக்கணக்கான மக்கள் அங்கு குவிந்து இருக்கின்றனர். இந்த கும்பமேலாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் புனித நீராடியதாக போட்டோ ஒன்று டிரெண்டாகி வரும் நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் அது போலி போட்டோ என தெரிவித்துள்ளார்.
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல் பிரமுகர் என பல முகத்தை கொண்ட பிரகாஷ் ராஜ். அனைத்து மொழிப்படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார். இவர் சிறந்த நடிகராக மட்டுமில்லாமல், சமூக கருத்துக்களை துணிச்சலுடன் சொல்லும் அரசியல்வாதியாகவும். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரகாஷ் ராஜ், பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது கேள்வி எழுப்புவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

கும்பமேளாவில் நீராடினேனா?: இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மஹா கும்பமேளாவில், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என கங்கையில் புனித நீராடி வருகின்றனர். நடிகர் பிரகாஷ் ராஜ், உத்திரபிரதேசத்தில் நடைபெற்று வரும், மகா கும்பமேளாவில் கலந்துகொண்டு புனித நீராடினார் என்கிற போட்டோ இணையத்தில் டிரெண்டானது. இந்த போட்டோவை நடிகரும் பாஜ பிரமுகருமான பிரசாந்த் சாம்பர்கி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு, இனி இவர் செய்த பாவங்கள் நீங்கட்டும் என்று பதிவிட்டு இருந்தார்.

மத வெறியர்கள்: கடவுள் நம்பிக்கையே இல்லை என்று சொல்லும் பிரகாஷ் ராஜ், கும்பமேளாவில் நீராடினாரா என்று ட்ரோல் செய்து வந்தனர். பிரசாந்த் சம்பர்கியின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து, பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் தளத்தில், போலி செய்திகளை பரப்புவதுதான் மத வெறியர்கள், கோழைகளின் கடைசி வழி ஆகும். புனித விழாவில் கூட போலி செய்திகளை பரப்புகிறார்கள். இது வெட்கக்கேடான செயல். போலி புகைப்படத்தை பரப்பியவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











