தி கிரே மேனில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதை மட்டுமே மனதில் வைத்திருந்தேன்:தனுஷ் கூல் ரியாக்ஷன்
சென்னை : மிகப் பெரிய ஹாலிவுட் படத்தில் நடிப்பதை நினைத்து பதட்டமடையவில்லை என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
தி கிரே மேன் படத்தில் சிறப்பாக நடித்துவிட்டால் ஹாலிவுட்டில் இருந்து இந்தியர்களுக்கு அழைப்பு வரும் என நினைத்தேன்.
தி கிரே மேன் படத்தில் நடித்தது புது அனுபவமாக அமைந்தது : எந்தவித அழுத்தங்களும் இல்லாமல் சிறப்பாக நடித்தேன்.
ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் படங்களை எடுத்து புகழ்பெற்ற ரூசோ பிரதர்ஸ் இயக்கியுள்ள 'தி கிரே மேன்' படத்தில், தனுஷ் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். ஜேக்கப் தி ஹன்டர் என்ற நெகட்டிவ் பாத்திரத்தில் நடித்துள்ள தனுஷின் அதிரடியை காண அவரது ரசிகர்கள் வெறித்தனமான வெயிட்டிங்கில் உள்ளனர். தனுஷ் சும்மாவே மாஸ் காட்டுவார், இப்போ ஹாலிவுட் மூவி வேறயான்னு, தமிழ்த் திரையுலகமே இந்தப் படத்த பார்க்க காத்துகிட்டு தான் இருக்காங்க.

பயமா… எனக்கா?
இந்த நிலையில தி கிரே மேன் படத்துல நடித்தது குறித்து பிரபல நாளிதழுக்கு பேட்டியளித்த தனுஷ், ஹாலிவுட்டில் நடிக்க தனக்கு பயமேதும் இல்லை என கெத்து காட்டியுள்ளார். தான் சிறப்பாக நடித்துவிட்டால் இன்னும் சில திறமையான இந்தியர்கள் ஹாலிவுட்டில் தடம் பதிப்பார்கள் என்பது மட்டுமே எனது மனதில் இருந்தது எனவும் தெரிவித்துள்ளார். தனுஷின் இந்தக் கருத்து திரையுலகைச் சேர்ந்தவங்கள மட்டும் இல்லாம, ரசிகர்களையும் நெகிழ்ச்சியடைய வச்சிருக்கு.

நடிப்புன்னு வந்துட்டா அசுரன் தான்
ஹாலிவுட்ல நடிக்கும் போது மொழியும் நாடும் தான் புதுசா இருந்ததாகவும், ரூசோ பிரதர்ஸ் உடன் சேர்ந்து வேலை பார்த்தது செம்மையான அனுபவம்ன்னும் சொல்லிருக்கார். ரூசோ பிரதர்ஸின் ஒர்க் ஸ்டைலும் சிம்பிளிசிட்டியும் தனக்கு ரொம்பவே உதவியா இருந்ததாகவும் தனுஷ் குறிப்பிட்டுள்ளது, ரசிகர்கள் கிட்ட பேசுபொருளா ஆகிருக்கு. தனுஷ். 2018ம் ஆண்டிலேயே ஹாலிவுட்டில் தடம் பதித்த தனுஷ், 'தி கிரே மேன்' படம் மூலமா இன்னும் உச்சத்துக்கு போவார்ன்னு எதிர்பார்க்கப்படுது.

அது வேற இது வேற
மார்வெல்ஸ் படங்களைப் போல இல்லாமல் 'தி கிரே மேன்' படத்தை இயக்கும் போது நிறைய சவால்கள் இருந்ததாக ரூசோ சகோதரர்களும் தெரிவித்துள்ளனர். மார்வெல்ஸ் படங்களில் சூப்பர் ஹீிரோவுக்கு எந்தவொரு விதிகளும் கிடையாது, ஆனால், தி கிரே மேன் அப்படி இல்லை. ஆக்சன் காட்சிகளில் பல சவால்கள் இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளது, ரசிகர்களிடம் படம் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.

அப்போ இனி ஹாலிவுட் தானா?
'தி கிரே மேன்' படத்தில் தனுஷுடன் இணைந்து ஹாலிவுட் டாப் ஸ்டார்கள் ரையான் காஸ்ஸிங், கிறிஸ் இவான்ஸ், அனா டி அர்மாஸ், ஜெசிக்கா ஹென்விக் என பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்த இவர்கள் அனைவரும், தனுஷை புகழ்ந்து தள்ளிவிட்டனர். அதனால் தனுஷ் தொடர்ந்து ஹாலிவுட் படங்களில் அதிகம் நடிக்கலாம் என்ற பேச்சும் அடிபட துவங்கிவிட்டது. தனுஷின் நம்பிக்கையை போல அவர் மட்டும் இல்லாமல், அவருடன் இன்னும் பல திறமையான இந்தியர்களும் ஹாலிவுட்டில் தடம் பதிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.


Click it and Unblock the Notifications











