15 வயசுல ஆபாச வெப்சைட்ல என் போட்டோ.. அப்பா எனக்கு கொடுத்த டார்ச்சர்.. பிக் பாஸ் நடிகை பகீர்!

மும்பை: பிக் பாஸ் ஓடிடியில் பங்கேற்று சோஷியல் மீடியாவில் விசித்திரமான ஆடைகளை அணிந்து ஏகப்பட்ட ட்ரோல்களுக்கு உள்ளாகி வரும் நடிகை உர்ஃபி ஜாவேத் தான் ஏன் இந்த நிலைக்கு தள்ளப்பட்டேன் என்பது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருப்பது பாலிவுட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

மேலாடையே இல்லாமல் டாப்லெஸ் போஸ் கொடுத்து ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி வரும் நடிகை உர்ஃபி ஜாவேத் தனது தந்தை உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் தனக்குக் கொடுத்த தொல்லைகள் குறித்து மனம் விட்டுக் கதறி உள்ளார்.

I was physically and mentally abused by my father - Urfi Javed opens up

வீட்டை விட்டு 17 வயதில் அதன் காரணமாகவே ஓடி வந்தேன். வேற வழியில்லாமல் என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்த போது தான் இப்படி வித்தியாசமாக மாடலிங் செய்து பாப்புலர் ஆனேன் எனக் கூறி உள்ளார்.

பூ மட்டும் தான் டிரெஸ்: பழங்கள், காய்கறிகள், பூட்டுகள், போட்டோக்கள், ஒயின் கிளாஸ், லட்டு என ஒவ்வொரு பொருட்களையும் வைத்து தனது மர்ம பாகங்களை மறைத்தபடி படு கவர்ச்சியாக வீடியோ வெளியிட்டு வரும் நடிகை உர்ஃபி ஜாவேத் லேட்டஸ்ட்டாக வெறும் ஜோதிப்பூவை மட்டுமே ஆடையாக அணிந்து கொண்டு உச்சகட்ட கவர்ச்சியில் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. இப்படி படு மோசமாக கவர்ச்சி என்கிற பெயரில் போட்டோஷூட் நடத்தி வரும் உர்ஃபி ஜாவேத் தான் ஏன் இப்படி மாறினேன் என்பது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி தான் பாலிவுட் ரசிகர்களை பதற வைத்துள்ளது.

I was physically and mentally abused by my father - Urfi Javed opens up

15 வயதில் பார்ன் சைட்டில் போட்டோ: லக்னோவில் பிறந்து வளர்ந்த நான் எப்போதுமே டாப்ஸ்க்கு மேல் ஓவர் கோட் அணிந்து கொண்டு தான் எங்கேயும் சென்று வந்தேன். எனக்கே தெரியாமல் 15 வயதில் என்னுடைய போட்டோவை பார்ன் சைட்டில் திடீரென யாரோ அப்லோடு செய்து விட்டனர். இதுபற்றி என் சொந்தக்காரர்கள் அப்பாவிடம் சொல்ல அவர் என்னை அடித்து துன்புறுத்தினார். இத்தனைக்கும் என்னோட சோஷியல் மீடியா பக்கத்தில் இருக்கும் நார்மலான போட்டோவைத் தான் யாரோ வேண்டுமென்றே அதில் அப்படியே போட்டு விட்டனர்.

ஆபாச படங்களில் நடிக்கப் போறியா எனக் கேட்டே என் அப்பா பெல்ட்டால் அடித்து துன்புறுத்தினார். என் சொந்தக்காரங்களும் சேர்ந்து கொண்டு என்னை அடித்தனர் என உருக்கமாக பேசி உள்ளார்.

அப்யூஸ் பண்ண அப்பா: நான் சின்ன வயசுல இருந்த போது எனக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் என் அப்பா தொல்லை கொடுத்தார். உடல் அளவிலும் மனதளவிலும் ரொம்பவே பாதிப்புக்கு உள்ளானேன். பார்ன் சைட்டில் என் போட்டோ வந்த பிறகு என்னை பார்ன் ஸ்டார் என்றே என் அப்பா அழைக்க ஆரம்பித்தார். ஆபாச படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு எல்லாம் 50 லட்சம் தராங்களாமே நீ எவ்ளோ காசு வாங்குன என என்னை கேட்டு டார்ச்சர் செய்தார்.

அதன் பிறகு ஒரு 2 ஆண்டுகள் வீட்டிலேயே சமாளித்து இருந்தேன். ஆனால், அந்த நரகத்தில் அதற்கு மேல் வாழ முடியவில்லை. தற்கொலை செய்து கொள்ளவும் முயற்சி செய்தேன். ஆனால், அதுவும் என்னால் சரியாக செய்ய முடியவில்லை. வீட்டை விட்டே 17 வயதில் ஓடி மும்பைக்கு வந்தேன்.. பின்னர் அங்கே சீரியல்களில் நடிக்க வாய்ப்புகளை தேடி அலைந்தேன். டியூசன் எடுத்து சாப்பிடத் தொடங்கினேன்.

பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்ததும் எல்லாம் மாறிவிடும் என்று நினைத்தேன். ஆனால், ஒரே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்டேன். ஆனால், இப்போது கிடைத்திருக்கிற புகழுக்கு காரணமே அந்த ஒரு வார பிக் பாஸ் வாய்ப்பு தான் என பேசி உள்ளார் உர்ஃபி ஜாவேத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X