பாம்பை கடிக்க வைத்து.. இதுபோன்ற கொடூரத்தை சினிமாவில் கூட பார்க்க முடியாது.. பிரபல நடிகை அதிர்ச்சி

By

கொச்சி: சினிமாவில் கூட பார்க்க முடியாத கொடூரங்கள் நடைபெறுவது அதிர்ச்சி அளிக்கிறது என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

தமிழில், வேலூர் மாவட்டம், வித்தகன், தகராறு, சகலகலா வல்லவன், கொடிவீரன், சவரக்கத்தி உட்பட பல படங்களில் உட்பட சில படங்களில் நடித்தவர் பூர்ணா.

இவர் மலையாளத்தில், ஷாம்னா காசிம் என்ற தனது ஒரிஜினல் பெயரில் நடித்து வருகிறார்.

நடிகை பூர்ணா வீடு

நடிகை பூர்ணா வீடு

இவரிடம் கடந்த மாதம், ரபீக் என்பவர் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறியுள்ளார். பின்னர் ரபீக்கும் பூர்ணா வீட்டினரும் பழகி உள்ளனர். இதற்கிடையே, பூர்ணாவின் வீட்டுக்கு ரபீக் உட்பட 6 பேர் சென்றுள்ளனர். திருமணம் பற்றி பேசியுள்ளனர். ஆனால் அவர்களைப் பற்றிய தகவலை முழுமையாகக் கூறவில்லை.

மோசடி கும்பல்

மோசடி கும்பல்

பின்னர், பூர்ணாவின் குடும்பத்தினரிடம் பேசிய அந்தக் கும்பலை சேர்ந்தவர்கள், பணம் கேட்டுள்ளனர். இதனால் பூர்ணா குடும்பத்தினர் சந்தேகம் அடைந்தனர். அவர்கள் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்ட ஆரம்பித்தனர். பிறகுதான் அது மோசடி கும்பல் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார், திருச்சூரைச் சேர்ந்த ரபீக், சரத், அஸ்ரஃப், அபுபக்கர், ஹாரிஸ் உட்பட சிலரை கைது செய்தனர்.

சினிமாவை மிஞ்சும்

சினிமாவை மிஞ்சும்

இந்த வழக்கு பரபரப்பானது. இது கும்பல் மீது மேலும் பலர் புகார் கொடுத்துள்ளனர். இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகை பூர்ணா கூறியிருப்பதாவது: சமூகத்தில் பெண்களுக்கு எதிராக சினிமாவை மிஞ்சும் கொடுமைகள் நடக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன், கேரளாவில் ஒரு பெண்ணை பாம்பை கடிக்க வைத்துக் கொன்றுள்ளனர். இதைக் கேள்விபட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

Recommended Video

Anna Ben creates Awareness on Fake Casting call
சினிமாவில் பார்க்க முடியாது

சினிமாவில் பார்க்க முடியாது

இதுபோன்ற கொடூரமானச் சம்பவங்களை நீங்கள் சினிமாவில் கூட பார்க்க முடியாது. எனக்கு குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்த்து வருவதைப் பயன்படுத்தி மோசடி கும்பல் எங்கள் குடும்பத்தை அணுகி பெண் கேட்டது. அவர்கள் கொடுத்த முகவரி, பெயர் அனைத்தும் போலி என்பது தெரிந்ததும் புகார் கொடுத்தோம். மோசடி புகாரில் சிக்கி பெண்கள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதை இப்போது என்னால் உணர முடிகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X