ரஜினியை அப்படி அழைச்ச முதல் ஆள் இவங்கதான்... ரகசியம் சொன்ன ஹீரோ

By

கொச்சி: நடிகர் ரஜினிகாந்தை அப்படி அழைத்த முதல் நபர் மானசிதான் என்று நடிகர் திலீப் சொன்னார்.

நடிகர் திலீப் நடித்துள்ள மலையாள படம், மை சான்டா. சன்னி வெய்ன், அனுஶ்ரீ, கலாபவன் ஷஜோன், ஷைன் உட்பட பலர் நடித்துள்ளனர். மானசி என்ற சிறுமி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

சுகீத் இயக்கியுள்ள இந்தப் படம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாக இருக்கிறது. இதன் பாடல் வெளியீட்டு விழா கொச்சியில் நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இன்றைய சந்திப்பு.. நாளைய செய்தியாகலாம்.. ஒத்த போட்டோவை போட்டு ரசிகர்களை உசுப்பிவிட்ட பழைய கூட்டணி!

அங்கிள் அங்கிள்

அங்கிள் அங்கிள்

இந்த விழாவில் படத்தின் ஹீரோ திலீப் ஜாலியாக பேசினார். அவர் பேசும்போது, இந்த படத்தில் மானசி சிறப்பாக நடித்திருக்கிறார். படப்பிடிப்பின் போது என்னை, அங்கிள் அங்கிள் என்று அழைத்தாள். நான், அப்படி அழைக்காதே, சேட்டா (சகோதரன்) என்று கூப்பிடு என்றேன்.

ஹீரோயின் கீர்த்தி சுரேஷ்

ஹீரோயின் கீர்த்தி சுரேஷ்

ஏனென்றால், கீர்த்தி சுரேஷ், சனுஷா போன்றவர்கள் என்னை சேட்டா என்று அழைத்து பிறகு எனக்கு ஹீரோயினாக நடித்திருக்கிறார்கள். இது உண்மைதான்.

ரஜினி சேட்டா

ரஜினி சேட்டா

இந்த மானசி, முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். அந்தப் படத்தில் நடித்தபோது, ரஜினிகாந்தை எப்படி அழைப்பார் என்று கேட்டேன். சேட்டா என்று அழைத்தாராம். அதை போலதான் என்னையும் கூப்பிடணும் என்றேன். அவர் கேட்கவில்லை.

ரஜினியின் ஹீரோயின்

ரஜினியின் ஹீரோயின்

எனக்குத் தெரிந்து, ரஜினிகாந்தை சேட்டா என்று அழைத்த முதல் நபர் இவர்தான். அவர் ரஜினி சேட்டனின் ஹீரோயின் ஆக வாழ்த்துகிறேன்' என்றார் திலீப். அவரது பேச்சுக் கூட்டத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X