ஹீரோவுக்கு வேண்டிய நடிகையால் படத்தில் இருந்து நீக்கினார்கள்.. முன்னாள் ஹீரோயின் பரபரப்பு புகார்!
சென்னை: ஹீரோவுக்கு வேண்டிய நடிகையால் என்னைப் படத்தில் இருந்து திடீரென நீக்கினார்கள் என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
தமிழில் வாரணம் ஆயிரம், அசல், நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை உட்பட பல படங்களில் நடித்திருப்பவர், சமீரா ரெட்டி.
இவர் இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தொழிலதிபர் அக்ஷய் வர்தேவை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

பரமபத விளையாட்டு
திருமணத்துக்கு பின் நடிக்காமல் இருக்கும் சமீரா, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். தனது குழந்தைகள் மற்றும் குழந்தை வளர்ப்பு உள்பட பல விஷயங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்கிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், சினிமாவை பரமபத விளையாட்டுடன் ஒப்பிட்டிருந்தார்.

முத்தக்காட்சி
ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று முத்தக் காட்சியில் நடிக்க வேண்டும் என்றார்கள் என்றும் நீங்கள் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்திருக்கிறீர்களே? என்றும் அதை போல இதிலும் நடியுங்கள் என்று சொன்னதாகவும் இல்லை என்றால் படத்தில் இருந்து நீக்கப்படலாம் என்று சொன்னதாகவும் கூறி இருந்தார்.

வாரிசு நடிகைக்காக
இந்நிலையில், மூன்று படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டு அதிலிருந்து நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: ஒரு முறை ஒரு வாரிசு நடிகைக்காக என்னை அந்தப் படத்தில் இருந்து நீக்கினார்கள். படத்தின் ஹீரோ அந்த நடிகையோடு நட்பாக இருந்ததால் அவரை நடிக்க வைத்தார். ஒரு தயாரிப்பாளர் அவர் அலுவலகத்துக்கு அழைத்து, படத்திலிருந்து என்னை நீக்கிவிட்டதாகச் சொன்னார்.

மோசமாக உணர்ந்தேன்
எனக்கு திறமை இல்லை என்றார். நான் மோசமாக உணர்ந்தேன். எனக்கே என் திறமை மேல் சந்தேகம் வந்துவிட்டது. எனக்குப் பதிலாக வேறொரு வாரிசு நடிகையை நடிக்க வைத்திருப்பதுதான் காரணம் என்று பிறகு தெரியவந்தது. அந்த உண்மையைச் சொல்லும் தைரியம் அந்தத் தயாரிப்பாளருக்கு இல்லை என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











