காதல் படத்தில் நான்தான் ஹீரோயினாக நடிக்க வேண்டியது... கூட்டிட்டு போய் ஏமாத்திட்டாங்க !
சென்னை : இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா நடிப்பில் 2004ல் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் காதல்
இப்படம், கன்னடம்,பெங்காலி, மராத்தி,பஞ்சாபி, நேபாளி உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அனைத்து மொழிகளிலும் கலக்கியது
காதல் படத்தில் நான்தான் ஹீரோயினாக நடிக்க வேண்டியது என அந்த படத்தில் தோழி கதாபாத்திரத்தில் நடித்திருந்த சரண்யா நக் தெரிவித்துள்ளார்

உண்மை சம்பவங்களின் அடிப்படையில்
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காதல். காதலை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான காதல் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

கிளைமாக்ஸ் காட்சி மனதை உலுக்கியது
பரத் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் சந்தியா கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார். உண்மைக்கு மிக அருகில் இருப்பது போல எடுக்கப்பட்ட காதல் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி காண்போர் அனைவரது மனதையும் உலுக்கியது . கிளைமாக்ஸ் காட்சிக்காகவே ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக இந்த படத்திற்கு ஆதரவு கொடுத்து வந்தனர்

ஹீரோயினுக்கு தோழியாக நடித்தார்
பரத் மற்றும் சந்தியாவுடன் இணைந்து இந்த படத்தில் சரண்யா நக் நடிப்பும் மிக பிரபலமாக பேசப்பட்டது. காதல் கவிதை, நீ வருவாய் என போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சரண்யா நக் காதல் படத்தில் முழுநீள கதாபாத்திரத்தில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்து இருப்பார். கதாநாயகிக்கு இணையான கதாபாத்திரமாக சரண்யா வந்து சென்றதால் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.

கூட்டிட்டு போய் ஏமாத்திட்டாங்க
அதன்பிறகு பேராண்மை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, துள்ளுற வயசு,முயல், ரெட்டை வாலு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக இருந்த போதும் இப்பொழுது படங்களில் பெரிதாக நடிக்காமல் உள்ள சரண்யா நக் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது காதல் படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தது சரண்யாதானம். சரண்யாவை ஹீரோயினாக நடிக்க வைக்கிறேன் என்று அழைத்துச் சென்று நடிக்க வைத்தார்களாம். பின் ஹீரோயினுக்கு தோழியாக நடிக்க வைத்து ஏமாற்றி விட்டார்களாம் என காதல் படத்தில் தனக்கு நடந்த அனுபவங்களை சரண்யா தனியார் யூட்யூப் சேனல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











