ஹோட்டல் அறையில் நடந்த கொடூரம்: நடிகை பரபரப்பு பேட்டி
Recommended Video

மும்பை: படப்பிடிப்புக்காக வெளியூர் சென்ற இடத்தில் தனக்கு நடந்த கொடுமை பற்றி பேசியுள்ளார் நடிகை ரேணுகா சஹானே.
பாலிவுட் நடிகர் ஆலோக் நாத் மது அருந்திவிட்டால் ஆளே மாறிவிடுவார் என்று பலர் கூறி கேள்விப்பட்டதாக நடிகை ரேணுகா சஹானே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர் வெளியூருக்கு சென்ற இடத்தில் நடந்த சம்பவம் பற்றி கூறியுள்ளார். இது பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது,

ஷூட்டிங்
அந்தாக்ஷரி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நான் நொய்டா சென்றேன். ஜீ நிறுவனத்தின் புதிய ஸ்டுடியோவை அங்கு திறந்தனர். அங்கு வைத்து நிகழ்ச்சியை ஷூட் செய்ய சென்றோம். ஷூட்டிங்கிற்காக அடிக்கடி வெளியூர்களுக்கு செல்வதால் ஹோட்டல் அறையில் தனியாக தங்குவது பழக்கமாகிவிட்டது.
[பேண்ட்டை கழற்றி காண்பித்தார், டார்ச்சர் செய்தார்: இயக்குனர் மீது நடிகை புகார் ]

ரூம் சர்வீஸ்
ரூம் சர்வீஸ் ஆள் ஒருவர் என் ஹோட்டல் அறைக்குள் வந்தார். என்னை பார்த்ததும் மேடம், நான் உங்களின் தீவிர ரசிகை என்று நிறைய பேசினார். நான் நன்றி தெரிவித்தேன். அவர் கொண்டு வந்த சாப்பாட்டை டேபிளில் வைத்துவிட்டு என் கண் முன்பு சுயஇன்பம் அனுபவிக்கத் துவங்கினார். அவரின் செயலை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன்.

பயம்
அறையில் இருந்து வெளியே செல்லுமாறு நான் அந்த நபரிடம் கூறினேன். இது குறித்து ஹோட்டல் மேனேஜரிடம் புகார் தெரிவிப்பேன் என்றும் அவரிடம் கூறினேன். அந்த சம்பவத்திற்கு பிறகு என் உதவியாளர் அஸ்வினியை அழைத்து என்னுடன் தங்க வைத்தேன். அந்த அளவுக்கு நான் பயந்துவிட்டேன். அதில் இருந்து நான் ஹோட்டல் அறையில் தனியாக தங்குவதே இல்லை.

பிரச்சனை
சினிமா துறையில் உள்ளவர்களால் தான் இது போன்று நடக்கும் என்று மக்கள் நினைக்கிறார்கள். நமக்கு தெரியாதவர்கள் கூட அசிங்கமாக நடந்து கொள்கிறார்கள். முன்பு சமூக வலைதளம் எல்லாம் கிடையாது. ஒரு குடும்பத்தில் பாலியல் தொல்லை நடந்தால் அதை பெரிய ரகசியமாக வைத்திருப்பார்கள். போலீசில் பாலியல் புகார் தெரிவித்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை நினைத்து பயந்தே பலர் புகார் தெரிவிப்பது இல்லை என்று ரேணுகா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











