நானும், கம்ருதீனும் சேர்ந்துதான் பண்ணோம்.. என் மீது ஏன் பழி போடுறீங்க?.. விஜே பார்வதி ஒப்புதல் வாக்குமூலம்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் டைட்டில் வின்னராக திவ்யா கணேஷ் வந்தாலும்; அவரைவிடவும் சென்சேஷனலாக இருந்தவர்கள் என்றால் அவர்கள் விஜே பார்வதியும், கம்ருதீனும்தான். இரண்டு பேரில் ஒருவர்தான் டைட்டிலை அடிப்பார்கள் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் சாண்ட்ராவை எட்டி உதைத்த விவகாரத்தில் ரெட் கார்டு பெற்று வெளியேறினார்கள். இந்நிலையில் விஜே பார்வதி கொடுத்திருக்கும் பேட்டியில் அதிரடியாக பேசியிருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் மொத்தம் 20க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் சோஷியல் மீடியாக்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள். திவ்யா கணேஷ், கனி, பிரவீன் காந்தி, பிரஜின், பார்கவ், சாண்ட்ரா உள்ளிட்டோர் மட்டும்தான் திரைத்துறையிலும், சின்னத்திரையிலும் ஜொலித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சோஷியல் மீடியா இன்ஃபுளூயன்ஸர்களாக இருந்தாலும் தங்களால் முடிந்த அளவுக்கு நிகழ்ச்சியை பரபரப்பாகவே கொண்டு சென்றார்கள்.
விஜே பார்வதி, கம்ருதீன்: இந்த சீசனில் விஜே பார்வதியும், கம்ருதீனும் சென்சேஷனலாக இருந்தார்கள். முதலில் அவர்களுக்குள்ளேயே ஒத்துவரவில்லை. நாளடைவில் நெருக்கமாகி நட்புக்கும் மேலே என்ற உறவு நிலைக்குள் சென்றார்கள். இருவரும் தனியறைக்கு செல்வது, டபுள் மீனிங்கில் பேசுவது என நாள்தோறும் என ஒன்றை செய்தார்கள். அவர்கள் அத்துமீறும்போதெல்லாம் தொகுப்பாளர் விஜய் சேதுபதியும் கண்டிக்க தவறவில்லை.

ரெட் கார்டு பெற்ற இரண்டு பேர்: போகப்போக அவர்களது அட்ராசிட்டி பெருகிக்கொண்டே போனது. அனைத்து ஆட்டத்துக்கும் ஒரு முடிவு இருக்கிறது என்பதற்கேற்ப இவர்களுக்கும் முடிவு வந்தது. டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கின்போது சக போட்டியாளர் சாண்ட்ராவை காரிலிருந்து விஜே பார்வதியும், கம்ருதீனும் எட்டி உதைத்தார்கள். அதனால் பேனிக் அட்டாக்கையும் சந்தித்தார் சாண்ட்ரா. அந்த சம்பவத்துக்கு பிறகு இரண்டு பேருக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.
கம்ருதீன் பாவம்: இரண்டு பேரில் ஒருவர்தான் டைட்டில் அடிப்பார் என்று நினைக்கப்பட்டது. ஆனால் இரண்டு பேருமே வெளியேறிவிட்டார்கள். அவர்களுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதற்கு அனைவருமே மகிழ்ச்சி தெரிவித்தார்கள். அதேசமயம் பார்வதியுடன் மட்டும் சேராமல் இருந்திருந்தால் கம்ருதீனின் நிலைமையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் வேறு மாதிரி இருக்கும் என்றும் ஒருதரப்பினர் கூறினார்கள். திவ்யா கணேஷும் அதே தொனியில் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.
விஜே பார்வதி பேட்டி: இந்நிலையில் விஜே பார்வதி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், "பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் சரி, வெளியே வந்த பிறகும் சரி நான்தான் கன்டென்ட். வெளியே வந்த பிறகு மற்ற ஹவுஸ் மேட்ஸ் பற்றி தரக்குறைவாக பேசியதே கிடையாது. எனக்கு நடிக்க தெரியாது. அதனால்தான் எனக்கு வாழ்க்கை கடினமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். நானும், கம்ருதீனும் சேர்ந்துதான் ஒரு விஷயத்தை செய்தோம். ஆனால் பழியை மட்டும் ஏன் பாரு மீது போடுகிறீர்கள். ரொம்ப பிற்போக்குத்தனமான சிந்தனை உடையவர்கள்தான் இப்படியெல்லாம் பேசுவார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











