twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நூலிழையில் உயிர் பிழைத்தேன்.. 4 நொடிகளுக்கு முன்பு வரை அங்குதான் இருந்தேன்.. போட்டுடைத்த கமல்!

    |

    Recommended Video

    Indian 2 Shooting Spot Incident detailed | EVP Film City | Director Shankar | Kamal Hassan

    சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் பிழைத்ததாக நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தை பிரமாண்ட இயக்குநரான ஷங்கர் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் பெரும் பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது.

    படத்தின் காட்சிகள் சென்னை பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டு வருகிறது.

    சரிந்த கிரேன்

    சரிந்த கிரேன்

    இந்நிலையில் நேற்றிரவு ஷுட்டிங்கின் போது பிரேக் விடப்பட்டது. அப்போது கலைஞர்கள் லைட்டுகளை செட் செய்து கொண்டிருந்தனர். இதனால் இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல் உள்ளிட்டோர் சற்று தொலைவில் இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக லைட்டுகள் கட்டப்பட்டிருந்த கிரேன் சரிந்து விழுந்தது.

    நேரில் அஞ்சலி

    நேரில் அஞ்சலி

    இதில் உதவி இயக்குநர் கிருஷ்ணா உட்பட 3 பேர் கிரேனுக்கு அடியில் சிக்கி உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து உயிரிழந்த மூன்று பேரின் உடல்களும் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இந்நிலையில் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள 3 பேரின் உடல்களுக்கும் நடிகர் கமல்ஹாசன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

    நூலிழையில் பிழைத்தேன்

    நூலிழையில் பிழைத்தேன்

    பின்னர் அங்கு திரண்டிருந்த செய்தியாளர்களிடம் பேசினார் நடிகர் கமல்ஹாசன். இந்தியன் - 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து என் குடும்பத்தில் நிகழ்ந்ததாக கருதுகிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியன் -2 படப்பிடிப்பில் இணைந்த கிருஷ்ணா இன்று உயிருடன் இல்லை. நான் நூலிழையில் உயிர் பிழைத்தேன். 4 நொடிகளுக்கு முன்புவரை நான் அங்குதான் இருந்தேன் என்று கூறி அதிர்ச்சி அளித்திருக்கிறார்.

    காப்பீடு இருக்க வேண்டும்

    காப்பீடு இருக்க வேண்டும்

    மேலும் இந்தியன் -2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். 100 கோடி, 200 கோடி என மார்த்தட்டிக்கொள்ளும் நாம், கடைநிலை ஊழியனுக்கும் பாதுகாப்பு தர முடியவில்லை. சினிமாவில் கடைநிலை ஊழியனுக்கு கூட காப்பீடு இருக்க வேண்டும் என்ற நிலையை எய்த வேண்டும்.

    கமல் உருக்கம்

    கமல் உருக்கம்

    சினிமாவில் கடைநிலை ஊழியனுக்கும் பாதுகாப்பு இல்லாதது அவமானமாகும். இது போன்ற விபத்து இனி நடக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நேரம் இது. சினிமா துறையில் போதிய பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுகிறது என உருக்கமாக பேசினார் நடிகர் கமல்ஹாசன். நடிகர் கமல்ஹாசன் நேற்றிரவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Kamal said I was there only 4 seconds before. I just escaped he said. He has announced 1 CR financial aid to the 3 members families who have died in the spot of Indian2
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X