'கார் டிரைவர் நடவடிக்கைகள் அச்சுறுத்துவதாக இருந்தது..' நடந்தது என்ன? பிரபல கவர்ச்சி நடிகை விளக்கம்!
ஐதராபாத்: ஐதராபாத் கார் டிரைவர் புகார் கூறிய விவகாரத்தில் என்ன நடந்தது என்பது பற்றி நடிகை முமைத் கான் விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல கவர்ச்சி நடிகை முமைத் கான், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருகிறார்.
ஐதராபாத்தில் வசித்து வரும் அவர் மீது கடந்த சில நாட்களுக்கு முன் கார் டிரைவர் கூறிய புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

கார் டிரைவர்
தனக்குத் தர வேண்டிய 15000 ரூபாயைத் தராமல் ஏமாற்றியதாக கார் டிரைவர் ராகவா ராஜூ என்பவர் முமைத்கான் மீது புகார் கூறி இருந்தார். முமைத் கான் கோவா செல்ல வேண்டும் என்று என் காரை புக் செய்தார். அங்கு 3 நாட்கள் இருக்க வேண்டும் என்றார். சென்றேன்.
பின்னர் மூன்று நாட்களை 8 நாட்கள் ஆக்கினார்.

ரூபாயைத் தரவில்லை
ஆனால், தனக்கு தர வேண்டிய வாடகை பணமான, 15000 ரூபாயைத் தரவில்லை என்று கூறி இருந்தார். ஆதாரமாக, முமைத் கான் அனுப்பிய போன் நம்பருடன் கூடிய முகவரி, சுங்கச் சாவடிகளில் பணம் செலுத்திய ரசீதுகள், ரசிகர்கள் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை வெளியிட்டார்.

டிரைவர் மீது புகார்
தன்னைப் போல் மற்றொரு டிரைவர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே இதை சொல்வதாகவும் ராஜூ கூறி இருந்தார். இது பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நிலையில் இதுபற்றி அறிந்த நடிகை முமைத் கான், ஐதராபாத்தின் மேற்கு பகுதியில் உள்ள புஞ்சகட்டா போலீஸ் ஸ்டேஷனில், அந்த கார் டிரைவர் மீது நேற்றுமுன் தினம் புகார் கொடுத்தார்.

மறுத்தார் முமைத்கான்
அதில் டிரைவர் ராகவா ராஜூ கூறிய புகாரை மறுத்த நடிகை முமைத் கான், அவருக்கு கொடுக்க வேண்டிய அனைத்து பணத்தையும் செலுத்தி விட்டதாகவும் இருந்தும் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை ராஜூ கூறியுள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் கூறியுள்ளார்.

முமைத்கான் விளக்கம்
இந்நிலையில் என்ன நடந்தது என்பது நடிகை முமைத்கான் விளக்கமாக தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் இருந்து கோவா செல்ல அவர் ரூ.20 ஆயிரம் கேட்டார். சாப்பாடு, தங்குவது, டிராவல் பெர்மிட் ஆகியவற்றுக்கும் சேர்த்து ரூ.22 ஆயிரம் தருவதாகச் சொன்னேன். சம்மதித்தார்.

முறையான பர்மிட்
நான், என் நண்பர் ஜாவேத்தும் அவர் காரில் சென்ற பிறகுதான் தெரிந்தது, அவரிடம் முறையான பர்மிட் இல்லாதது. இதனால் கர்நாடக பார்டரில் அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. அவர் நடவடிக்கைகள் அச்சுறுத்துவதாகவே இருந்தது. கோவாவில் ஒரு நாள் அதிகமாக தங்க வேண்டி இருந்தது.

லக்கேஜை தரமாட்டேன்
அதற்கு ஆயிரம் ரூபாய் அதிகமாக தர ஒப்புக்கொண்டேன். ஐதராபாத் திரும்பியதும் மேலும் 8 ஆயிரம் ரூபாய் வேண்டும் என்றார். இல்லை என்றால் எங்கள் லக்கேஜ்களை தரமாட்டேன் என்று மிரட்டினார். இதுபற்றி புகார் கொடுத்துள்ளேன். காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன் எனக் கூறியுள்ளார்.
Recommended Video

வேட்டையாடு விளையாடு
நடிகை முமைத்கான், தமிழில், கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில், நெருப்பே, சிக்கி முக்கி நெருப்பே, விஜய்யின் போக்கிரி படத்தில், என் செல்லப்பேரு ஆப்பிள், கந்தசாமி படத்தில், என் பேரு மீனாகுமாரி உள்பட பல படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார். மம்பட்டியான் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications