“உலகில் வாழத் தகுதியில்லாதவன் ஆகி விடுவேன்”.. லாஸ்லியா மீதான பாசம் குறித்து சேரன் உருக்கம்!
லாஸ்லியாவுடனான தனது உறவு உண்மையானது என இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியாவிடம் தான் உண்மையான அப்பா பாசத்துடன் நடந்துகொண்டதாக இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சி மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்று சேரன், லாஸ்லியா உறவு. லாஸ்லியாவை தனது மகள் போல் பார்த்துக்கொண்டார் சேரன். அதேபோல் லாஸ்லியாவும் சேரனை சேரப்பா என்று தான் அழைத்தார்.
ஆனால் நிகழ்ச்சியின் ஒருகட்டத்தில் இவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. அதற்கு கவின், லாஸ்லியாவின் நட்பு காரணமாக கூறப்பட்டது. சேரன் உண்மையாக இல்லை, அவர் நடிக்கிறார் என்பது போன்ற கருத்துகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.
இந்நிலையில் லாஸ்லியாவிடம் தான் உண்மையான அன்போடு பழகியதாக சேரன் தெரிவித்துள்ளார். ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்து லாஸ்லியாவை பார்த்துக்கொண்டதாக அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக ராஜாவுக்கு செக் பட விழாவில் அவர் பேசியதாவது,

அப்பா உணர்வு
"நாம் எப்போது அப்பாவாக உணர்கிறோம் என்பது மிக முக்கியமான தருணம். நான் பல இடங்களில் அப்பாவாக உணர்ந்திருக்கிறேன். முதன் முதலில் நான் அப்பா ஆனபோது, என் கையில் பத்து பைசா கூட இல்லை. பிரசவ செலவுக்கு கூட நண்பரிடம் சென்று தான் பணம் வாங்கி வந்தேன். அதற்குள் இங்கே குழந்தையே பிறந்துவிட்டது.

ஆத்மாவின் வலி
அம்மா என்பவர் எல்லா தருணங்களிலும் குழந்தைகளுடன் இருப்பவர். ஆனால் அப்பா அவர்களுக்கு பின்னால் இருந்து பாதுகாத்து, அழகு பார்ப்பவர். நம்முடைய சந்தோஷங்கள் எல்லாவற்றுக்கும் காரணமாய் இருக்கும் ஆத்மா. அந்த ஆத்மாவின் வலியை யாருடனும் ஷேர் செய்ய முடியாது.

லாஸ்லியா
பிக் பாஸ் வீட்டில் கூட ஒரு அப்பாவாக வாழக்கூடிய வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அதை நான் உண்மையோடும், நேர்மையோடும், என் மகளை நான் பார்ப்பது போல் பார்த்துக்கொண்டேன். அதில் எந்த பாசாங்கும், போலித்தனமும், கேமுக்காக விளையாண்டதும் கிடையாது. அந்த பாசத்தை நான் பொய்யாக காண்பித்தால், இந்த உலகத்தில் வாழ நான் தகுதியில்லாதவன் ஆகி விடுவேன். அதனால் அதை நான் பொய்யாக செய்யவில்லை.

குடும்ப பிரச்சினை
வசந்த பாலன் பேசும் போது எனக்கு அது தான் ஞாபகத்துக்கு வந்தது. அப்பா எனும் உறவை காண்பிக்க நேரும்போது அதில் இருந்து நாம் விலகிவிடக்கூடாது. எந்த ஒரு குடும்பப் பிரச்சினையிலும் கூடவே சேர்ந்து பயணிக்க வேண்டும்", என சேரன் கூறினார்.


Click it and Unblock the Notifications











