எமோஷனலாக என்னை தொட்டுவிட்டது.. லாரன்ஸ் ட்வீட் - டாடா படத்துக்கு குவியும் பாராட்டு

சென்னை: டாடா படம் என்னை எமோஷனலாக டச் செய்துவிட்டதென்று நடிகரும், இயக்குநரும், நடன அமைப்பாளருமான லாரன்ஸ் ட்வீட் செய்திருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் கவின். ஆனால் அவருக்கு எந்த திருப்புமுனையும் ஏற்படாமல் இருந்தது. இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார். அங்கிருந்து வெளியே வந்த பிறகு லிஃப்ட் என்ற படத்தில் நடித்தார். விமர்சன ரீதியாக படம் ரசிக்கப்பட்டாலும் கவினுக்கு சொல்லிக்கொள்ளும்படி எந்த பெயரும் கிடைக்கவில்லை.

டாடா கொடுத்த திருப்புமுனை

டாடா கொடுத்த திருப்புமுனை

இந்தச் சூழலில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் டாடா என்ற படத்தில் நடித்திருக்கிறார் கவின். அவருக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து பிரபலமான அபர்ணா தாஸ் நடித்திருக்கிறார். ஒரு கல்லூரி மாணவன் குழந்தைக்கு தந்தையாகும் உருவாகும் சூழலை ஒன்லைனாக வைத்துக்கொண்டு படம் உருவாகியிருந்தது. சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது.

கவினை பாராட்டிய உலக நாயகன் கமல் ஹாசன்

கவினை பாராட்டிய உலக நாயகன் கமல் ஹாசன்

படம் கதை ரீதியாக எவ்வளவுக்கு எவ்வள்வு கொண்டாடப்படுகிறதோ அதே அளவு கவினின் நடிப்பும் பலரால் கொண்டாடப்படுகிறது. மேலும் உலக நாயகன் கமல் ஹாசன் கவினை நேரில் அழைத்து பாராட்டினார். அதோடு மட்டுமின்றி அடுத்ததாக ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் கவின் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. இதனால் கவின் உற்சாகத்தில் இருக்கிறார்.

டாடா வெற்றியை அடுத்து உருகிய கவின்

டாடா வெற்றியை அடுத்து உருகிய கவின்

கமல் ஹாசன் மட்டுமின்றி நடிகர் சூரியும் டாடா படத்தை பார்த்து பாராட்டினார். இப்படி திரையுலகினர் முதல் ரசிகர்கள்வரை டாடா படத்தையும், கவினையும் பாராட்டிவருவதால் அவர் நெகிழ்ச்சியுடன் காணப்படுகிறார். டாடா வெற்றி விழாவில் பேசிய கவின், "இந்த படத்தை என் நண்பன் மணிகண்டனுக்கு சமர்ப்பிக்கிறேன். அவன் இப்போது உயிரோடு இல்லை, நான் டிவியில் வரும் பொழுது விசில் அடித்து ரசித்தவன் அவன் தான். அவன் இப்போது இருந்திருந்தால் நிச்சயம் சந்தோஷப்பட்டு இருப்பான். அவனுக்காக ஏதாவது பண்ண வேண்டும் என தோன்றியது அதற்காகத்தான் இந்த படம். எங்கிருந்தாலும் பார்த்துக் கொண்டிருப்பாய் என நம்புகிறேன்" என உருக்கத்துடன் தெரிவித்தார்.

டாடாவுக்கு கிடைத்த அடுத்த பாராட்டு

டாடாவுக்கு கிடைத்த அடுத்த பாராட்டு

இந்நிலையில் நடிகரும், இயக்குநரும்,நடன அமைப்பாளருமான ராகவா லாரன்ஸ் டாடா படத்தை பாராட்டியிருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், " டாடா படத்தை பார்த்தேன். எமோஷனலாக என்னை படம் தொட்டுவிட்டது. ஒரு பக்காவான குடும்ப படம்.

அனைவரும் தியேட்டரில் பாருங்கள். படத்தை தயாரித்த அம்பேத்குமாருக்கு வாழ்த்துகள். சிறப்பாக எழுதி இயக்கி ரசிகர்களிடம் வழங்கிய இயக்குநர் கணேஷ் பாபுவுக்கும், சிறப்பாக நடித்த கவின் மற்றும் அபர்ணா தாஸுக்கும் வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X