Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்...
- News
சிலருக்கு என் "போட்டோ" மீதே கவலை! ‘கியூ’வை ஒழிச்சுட்டோம் - உலகமே நம்மை பார்த்து.. எதை சொல்றார் மோடி?
- Sports
தோல்விக்கு அருகில் இந்திய அணி.. இங்கி, விதியை மாற்றிய 2 வீரர்கள்.. வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது??
- Finance
மாஸ்டர் பிளான் போட்ட சந்திரசேகரன்.. இனி ஆட்டமே வேற..!
- Automobiles
முட்டி மோதி ஆளுக்கு ஒரு இடத்தை பிடித்த டாடா, ஹூண்டாய்... அசால்டா 8 இடங்களை தட்டி தூக்கிய மாருதி!
- Technology
யாரு நம்ம Xiaomiயா இது?- தலை சுத்த வைக்கும் விலை, ஆச்சரியப்பட வைக்கும் அம்சங்கள் உடன் Xiaomi 12S Ultra!
- Travel
த்ரில் நிறைந்த ரிவர் ராஃப்டிங் – தண்டேலியில் ஒரு சாகச அனுபவம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
அஜித் படத்தை முக்காடு போட்டுக் கொண்டு தியேட்டரில் பார்த்தேன்!
சென்னை : பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் நடிகர் ஆரவ்
இயக்குனர் சரண் இயக்கத்தில் வெளியான மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.
இப்பொழுது கைவசம் சில படங்களில் பிஸியாக நடித்து வரும் ஆரவ் அஜித் படத்தை முக்காடு போட்டுக் கொண்டு பார்த்ததாக தெரிவித்துள்ளார்
பீஸ்ட் ஷூட்டிங்கிற்க்கு அடம்பிடித்து சென்றேன்.... பிக்பாஸ் பிரபலம் ஓபன் டாக்!

ஹீரோவாக
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டு வருகிறது. பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களின் மனதை வென்ற ஆரவ் இப்போது ஹீரோவாக ஆகியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி கொடுத்த மிகப்பெரிய பிரபலத்தை தொடர்ந்து இப்போது அடுத்தடுத்து படங்களிலும் ஹீரோவாக நடித்து வருகிறார்.

மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்
அந்த வகையில் இயக்குனர் சரண் இயக்கத்தில் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். முதல் முறையாக ஹீரோவாக நடிக்கும் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் வித்தியாசமான ரோலில் நடித்து அசத்திய ஆரவிற்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையவில்லை பெரிதாக கைகொடுக்கவில்லை.

அதிரடியாக தயார்
மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் இந்த படம் உருவாகி இருந்தாலும் நினைத்த அளவுக்கு வெற்றி பெற முடியவில்லை இந்த நிலையில் அடுத்ததாக ராஜபீமா என்ற படத்தில் மிக வித்தியாசமான ரோலில் நடித்து வருகிறார். அதற்காக உடலை தாறுமாறாக ஏற்றி அதிரடியாக தயார் செய்து நடித்து வருகிறார். இந்த படத்தில் யானை முக்கிய வேடத்தில் நடித்து வருகிறது. அதை தொடர்ந்து மீண்டும் வா அருகில் வா என்ற காதல் கதையில் நடித்து வருகிறார் இவ்வாறு தமிழ் சினிமாவில் ஹீரோவாக அடுத்தடுத்த படங்களில் மிக பிஸியாக நடித்து வரும் ஆரவ் நடிகர் அஜித்தின் மிக தீவிரமான ரசிகர் ஆவார்.

அஜித்தின் தீவிர ரசிகர்
அஜித்தின் படங்கள் எதுவாக இருந்தாலும் அதை முதல்நாள் முதல் ஷோ கண்டு ரசித்து விடுவார். இரண்டு வருட காத்திருப்பிற்கு பிறகு அஜித் நடிப்பில் வெளியான வலிமை கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாகவும், பைக் ரேசிங் ஸ்டன்ட் காட்சிகளிலும் ரசிகர்களை ரொம்பவே திருப்தி செய்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது

முக்காடு போட்டுக்கொண்டு
இந்த நிலையில் அஜித் படங்களை ஒன்றுவிடாமல் முதல் நாளே தவறாமல் பார்த்து ரசிக்கும் ஆரவ் அஜித்தின் வலிமை படத்தை மட்டும் இன்னும் பார்க்கவில்லையாம். படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருந்ததால் இந்த வலிமையை இன்னும் பார்க்கவில்லை ஆனால் வழக்கமாக அஜித் படங்களை முதல் நாளே பார்த்து விடுவேன் சில முறை எல்லாம் முக்காடு போட்டுக்கொண்டு கூட பார்த்து ரசித்து விடுவேன் என ஒரு ஃபேன் பாயாக ஆரவ் பேசியுள்ளார். ஆரவுக்கு ராஜபீமா மற்றும் மீண்டும் வா அருகில் வா என இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளன.