twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புதியவர்களான ரஜினி, கமலோடு என்னை ஒப்பிடாதீங்க: உதயநிதி

    By Siva
    |

    Recommended Video

    முதன்முறையாக திமுக கொடியுடன் களமிறங்கிய உதயநிதி!

    சென்னை: சின்ன வயதிலியே சிறைக்கு சென்றவன் நான் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    ரஜினிகாந்த், கமல் ஹாஸன் ஆகியோர் அரசியலுக்கு வந்துள்ளனர். இந்நிலையில் நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலினும் முழுநேர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார்.

    இது குறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியதாவது,

    நடிகன்

    நடிகன்

    என்னை நடிகனாக பார்க்காதீர்கள். நான் திமுக குடும்பத்தில் பிறந்தவன். கலைஞரின் பேரன். நான் குழந்தையாக இருந்தபோது என் தாத்தாவை பார்க்க சிறைக்கு சென்றுள்ளேன். என் அம்மாவுடன் சிறைக்கு சென்றுள்ளேன்.

    பேச்சு

    பேச்சு

    நான் தலைவரின் பேச்சை கேட்டு, அவரின் அரசியல் பணியை பார்த்து வளர்ந்தவன். நான் தலைவர் மற்றும் என் தந்தையுடன் சேர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன்.

    கட்சி

    கட்சி

    தற்போது முழுநேர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளேன். அவ்வளவு தான். தற்போதைக்கு எனக்கு என்று எந்த திட்டமும் இல்லை. கட்சியின் கொள்கைகளை, சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்வேன்.

    நடக்காது

    நடக்காது

    பாஜக எங்களுக்கு போட்டியே இல்லை. அதன் பிரித்து ஆளும் கொள்கை தமிழ்நாட்டில் வேலை செய்யாது. பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்களால் கொண்டு வரப்பட்ட இயக்கம் எங்களுடையது.

    கமல்

    கமல்

    ரஜினி, கமலுடன் என்னை ஒப்பிடாதீர்கள். நான் பல காலமாக கட்சி பணி செய்கிறேன். புதியவர்கள் அரசியலுக்கு வருவது நல்லது. ரொம்ப காலம் கழித்து அரசியலுக்கு வர முடிவு செய்துள்ளார் ரஜினி, கமலுக்கு ரசிகர் மன்றம் உள்ளது. அவர்கள் வந்து, தேர்தலில் போட்டியிடட்டும் என்றார் உதயநிதி ஸ்டாலின்.

    English summary
    Actor cum producer Udhayanidhi Stalin said that his mother took him to prison when he was a kid. He visited the prison to see his grandfather. Udhay has decided involve himself in active politics.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X