பீஸ்ட் ஷூட்டிங்கிற்க்கு அடம்பிடித்து சென்றேன்.... பிக்பாஸ் பிரபலம் ஓபன் டாக்!
சென்னை : இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட்
ஏப்ரல் 13-ஆம் தேதி பீஸ்ட் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்
இந்த நிலையில் பீஸ்ட் படப்பிடிப்புக்கு அடம்பிடித்து சென்றதாக பிக்பாஸ் கவின் கூறியுள்ளார்.

ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீஸ்
கோலமாவு கோகிலா, டாக்டர் என இரண்டு சூப்பர் ஹிட் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் நெல்சன் அடுத்ததாக விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார் . இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 13-ஆம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்

டார்க் காமெடி
பீஸ்ட் படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்களும் இணையதளத்தில் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தைப் பிடித்ததோடு இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பலமடங்கு உயர்ந்துள்ளது மேலும் இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நெல்சன் படங்கள் என்றாலே அதில் டார்க் காமெடிக்கு பஞ்சம் இருக்காது அதை தன்னுடைய முந்தைய படங்களிலேயே நெல்சன் நிரூபித்து இருப்பார் . இப்பொழுது அதே பாணியில் ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்து பீஸ்ட் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்

உதவி இயக்குனராக
தொகுப்பாளராக இருந்து பின் சீரியல்களில் ஹீரோவாக நடித்து பிக்பாஸ் மூலம் மேலும் பிரபலமடைந்த நடிகர் கவின் இப்பொழுது மாஸ்டர் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். கிட்டத்தட்ட பீஸ்ட் படத்திற்கான ஸ்கிரிப்ட் முழுவதிலும் இயக்குனர் உடன் இணைந்து பணியாற்றிய கவின் பீஸ்ட் படப்பிடிப்புக்கு அடம் பிடித்து சென்றதாக கூறியுள்ளார்

படப்பிடிப்புக்கு அடம்பிடித்து சென்று
விஜய்யின் மிகத் தீவிரமான ரசிகரான கவின் ஆரம்ப காலங்களில் மால்களில் ஈவன்ட் ஹோஸ்ட் செய்யும்போதே விஜய்யின் துப்பாக்கி கூகுள் கூகுள் பாடலுக்கு பிரமோஷன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இப்பொழுது பீஸ்ட் படத்திலும் விஜய் உடன் இணைந்து பணியாற்றுவதால் படப்பிடிப்புக்கு அடம்பிடித்து சென்று விஜய்யை பார்த்து ரசித்து விட்டு வந்ததாக கவின் பூரித்துப் போய் தெரிவித்துள்ளார். படங்களில் அடுத்தடுத்து கவனம் செலுத்திவரும் கவின் லிப்ட் வெற்றியை தொடர்ந்து ஆகாச வாணி என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்தடுத்து படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் வளரும் நடிகராக கவின் உள்ளார்.


Click it and Unblock the Notifications











