இதோ மீண்டும் வந்துவிட்டேன்.. இனி வரிசையாக நடிப்பேன்.. ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சிம்பு!

இனி வரிசையாக நடிப்பேன். நான் உங்களை விட்டு எங்கும் செல்லமாட்டேன், என் ரசிகர்கள்தான் எனக்கு எல்லாம் என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

சென்னை: இனி வரிசையாக நடிப்பேன். நான் உங்களை விட்டு எங்கும் செல்லமாட்டேன், என் ரசிகர்கள்தான் எனக்கு எல்லாம் என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

Recommended Video

Simbhu Power packed Speech | Nakshatra 2020 | Dhanalakshmi Srinivasan College | STR

நடிகர் சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படம் தயாராகிக் கொண்டு இருக்கிறது. இயக்குனர் பாரதிராஜா, எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த வாரம் தொடங்கியது. பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி என்று பெரிய பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது.

சிம்பு என்ன பேசினார்

சிம்பு என்ன பேசினார்

இந்த நிலையில் சென்னையில் விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சிம்பு முக்கியமான விஷயங்கள் குறித்து பேசினார். அதில், நாம் ஜெயித்துக் கொண்டிருக்கும் காலத்தில் நம்மைச் சுற்றி ஒரு பெரிய கூட்டம் இருக்கும். அவர்கள் நம்மை புகழ்வார்கள். நம்முடைய பெயருக்காக நம்முடன் இருப்பார்கள். நிமிடம் எதுவும் இல்லை என்றால் அவர்கள் நம்மை விட்டு செல்வார்கள்.

பலமுறை

பலமுறை

எனக்கு இப்படி பலமுறை நடந்து இருக்கிறது. நான் வெற்றி பெற்ற சமயங்களில் என்னுடன் பலர் இருந்தனர். ஆனால், என் தோல்விகளின்போது என்னோடு என் ரசிகர்கள் மட்டுமே இருந்தனர். என் ரசிகர்கள் அனைவரும் என்னுடன் நின்றீர்கள். நான் உங்களுக்கு நிறைய நன்றிக்கடன் பட்டு இருக்கிறேன்.

மறக்க மாட்டேன்

மறக்க மாட்டேன்

உங்களை நான் மறக்க மாட்டேன். உங்களை எப்படி நான் விட்டுக் கொடுப்பேன். சிறு வயதில் இருந்தே உங்களின் அன்பால் நடித்து வருகிறேன். அப்போது எனக்கு ஆதரவு கொடுத்தது நீங்கள்தான். இடையில் எனக்காக சிறு இடைவெளி எடுத்தேன். என்னை பலர் கிண்டல் செய்தனர். இதோ இப்போது திரும்பி வந்துவிட்டேன்.

வரிசையாக நடிப்பேன்

வரிசையாக நடிப்பேன்

இனி வரிசையாக நடிப்பேன். நான் உங்களை விட்டு எங்கும் செல்லமாட்டேன், உங்களுடன்தான் நான் இனி இருக்க போகிறேன். மாநாடு படம் உங்களுக்கு எல்லாம் பிடிக்கும். படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது என்று சிம்பு குறிப்பிட்டு இருக்கிறார். அவரின் இந்த பேச்சு ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X