சில இயக்குனர்கள் பண்றத பாத்தா வயித்தெரிச்சலா இருக்கு... இயக்குனர் சுந்தர் சி ஆவேசம்!
சென்னை: இயக்குனர்,நடிகர், தயாரிப்பாளர் என என பல முகங்களை கொண்டுள்ளவர் சுந்தர் சி
படங்களை இயக்கி வரும் அதேசமயம் சுந்தர் சி பல படங்களில் ஹீரோவாக நடித்து கலக்கிக் கொண்டு உள்ளார்
இந்த நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இன்னும் சில இயக்குனர்கள் செய்வதை பார்க்கும்போது வயித்தெரிச்சலாக உள்ளது என ஆவேசமாக பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வைரலாகி வருகிறது.

காமெடிக்கு அதிக முக்கியத்துவம்
சுந்தர் சியின் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் என்றாலே அதில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. அனைவரும் வயிறு குலுங்க சிரிக்க கூடிய ரசிக்கக்கூடிய மிகச்சிறந்த காமெடியுடன் கூடிய நல்ல கதை களத்தில் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்த இவர் இப்பொழுது ஹீரோவாகவும் பல படங்களில் பட்டையை கிளப்பிக் கொண்டு உள்ளார். குறிப்பாக சுந்தர் சி மற்றும் கார்த்திக் இணையும் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு ரொம்பவே ஸ்பெஷல் உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, கண்ணன் வருவான், உனக்காக எல்லாம் உனக்காக என அத்தனை படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.

எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை
தலைநகரம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான சுந்தர் சி அதைத் தொடர்ந்து நடித்த அனைத்து படங்களும் நல்ல வரவேற்ப்பையும் வெற்றியும் பெற்ற நிலையில் இப்பொழுது நடிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். நடிப்புக்கு மத்தியிலும் படங்களை இயக்கி வரும் சுந்தர் சி அரண்மனை 1 மற்றும் 2 பாகங்களை தொடர்ந்து இயக்கிய திரைப்படம் அரண்மனை 3. ஆர்யா, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால், ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு நளினி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருக்க பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை

தலைநகரம் 2
ஹீரோவாக அறிமுகம் ஆன தலைநகரம் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இயக்குனர் விஇசட் துரை இப்படத்தை இயக்க படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. கலகலப்பு-2 வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஜீவா, ஜெய் இணைந்து நடிக்கும் புதிய படத்தை எப்பொழுது இயக்கிவருகிறார். ஜெய்,ஜீவா உடன் இணைந்து இந்த படத்தில் ஸ்ரீகாந்த்தும் ஹீரோவாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

வயித்தெரிச்சலா இருக்கு
இந்த நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சுந்தர் சி சில இயக்குனர்களை பாக்கும்போது வயித்தெரிச்சலா இருக்கு. இன்னும் நம்ம இயக்குனர்கள் மைண்ட் வாய்ஸ் யூஸ் பண்றத பார்த்தா வாந்தி வர மாதிரி இருக்கு, சினிமாங்கிறது ஒரு விஷுவல் மீடியம் அதுல இன்னும் மைண்ட் வாய்ஸ் பயன்படுத்துறாங்க. கதவைத் திறந்தால் ஹீரோயின் நிப்பா அவ கிட்ட லவ்வ சொன்னா ஒத்துப் பங்களா என மைண்ட் வாய்ஸ் சொல்லிக்கிட்டு இருக்கு. அது எல்லாம் பார்க்கும் போது ரொம்ப வயித்தெரிச்சலா இருக்கும். டைரக்ட்டா காட்ட வக்கில்லாமல் ஏன் மைண்ட் வாய்ஸ் யூஸ் பண்ணி பண்றீங்கன்னு என கேட்க தோணுது என இயக்குனர் சுந்தர் சி ஆவேசமாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











