»   »  ஐ படம் அறிவித்தபடி வெளிவரும்... சிக்கல் தீர்ந்துவிடும் - தயாரிப்பாளர்

ஐ படம் அறிவித்தபடி வெளிவரும்... சிக்கல் தீர்ந்துவிடும் - தயாரிப்பாளர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

படம் அறிவித்தபடி பொங்கலுக்கு வரும் என்றும், சிக்கல்களை விரைவில் தீர்த்துவிடுவோம் என்றும் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ஐ படம் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ளது. வரும் ஜனவரி 14-ம் தேதி பொங்கலையொட்டி இந்தப் படம் வெளியாகும் என்று அறிவித்து, வெளியாகும் தியேட்டர்கள் விவரமும் வெளியிடப்பட்டது.

I will be released as per schedule, says Producer Aascar Ravichandiran.

இந்த நிலையில் பிக்சர் ஹவுஸ் மீடியா நிறுவனத்திடம் ஆஸ்கர் ரவிச்சந்திரன் கடன் வாங்கியுள்ளதாகவும் தங்களுக்கு கடனாக செலுத்த வேண்டிய பணத்தை இன்னும் தரவில்லை. அதனால் அவர் தயாரிப்பில் வெளிவர இருக்கும் 'ஐ' படத்தை தடை செய்ய வேண்டும்'' என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 'ஐ' படம் வெளியிடுவதற்கு 3 வாரங்கள் தடை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், இந்த வழக்கை சுமூகமாக முடித்துக் கொள்ள பேசி வருவதாகவும், நிச்சயம் படத்தை திட்டமிட்டபடி பொங்கலன்று வெளியிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

English summary
Producer Aascar Ravichandiran says that his movie I will be released as per scheduled.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil