செருப்பால அடிப்பேன்.. தப்பே பண்ணியிருந்தாலும் எப்படி சொல்லலாம்.. தர்ஷனை கிழித்த பிக்பாஸ் பிரபலம்!
Recommended Video
சென்னை: சனம் ஷெட்டி குறித்து செய்தியாளர் சந்திப்பில் தரக்குறைவாக பேசிய தர்ஷனை, நடிகை வனிதா சரமாரியாக விளாசியிருக்கிறார்.
நடிகை வனிதா விஜய்க்கு ஜோடியாக சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன்னதாகவே பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.
படங்களில் பிரபாலமானதை காட்டிலும் குடும்பத்தகராறு காரணமாக அடிக்கடி செய்திகளில் அடிபட்டு பெரும் பிரபலமானார் வனிதா. இந்நிலையில் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

திட்டி தீர்த்திய
இதில் தான் சொல்வதுதான் சரி, தான் செய்வதுதான் சரி, தன் பேச்சைதான் எல்லோரும் கேட்க வேண்டும் என்பதை போல நடந்து கொண்டார். போதாகுறைக்கு சண்டை மூட்டி விடுவதையும் பற்ற வைப்பதையும் வேலையாக கொண்டார். இதனால் அவர் மீது கடும் கோபமடைந்தனர் ரசிகர்கள். சமூக வலைதளங்களில் அவரை திட்டி தீர்த்தனர்.

மக்களின் ஆதரவு
இதன் காரணமாக இரண்டாவது வாரமே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் வனிதா. ஆனால் அவர் போன பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி போரானாது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழுவே வனிதாவை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பியது, முதல் இன்னிங்ஸில் சொதப்பிய வனிதா, இரண்டாவது இன்னிங்ஸில் மக்களின் ஆதரவை பெற்றார்.

சில்லியான காரணம்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டி விவகாரம் குறித்து பேசியிருக்கிறார் வனிதா. அதாவது, தர்ஷன் என் தம்பி மாதிரி, கழட்டிவிடுறதுக்கு சில்லியான காரணங்களை சொல்லிட்டு இருக்கான். அந்த பொண்ணு அந்த இரவு தப்பு பண்ணிருந்தாலும் இவன் கேமரா முன்னாடி அந்த பொண்ண தப்பு சொல்லி இருக்கக்கூடாது.

செருப்பால அடிச்சிருப்பேன்
ஏதோ பொஸஸ்ஸிவ்னஸ்னு சொல்றான், என்கிட்டலாம் சொல்லி இருந்தா செருப்பால அடிச்சிருப்பேன், இவ்வாறு படுகோபமாக கூறியிருக்கிறார் வனிதா. பிக்பாஸ் வீட்டில் தர்ஷனும ஷெரினும் நெருக்கமாக இருந்தது குறித்து அப்போதே விளாசினார் வனிதா. உங்களின் நெருக்கத்தால் வெளியே ஒருத்தி மன உளைச்சலுக்கு ஆளாகி கொண்டிருப்பதாகவும் அவர்களை எச்சரித்தார்.

அப்போதே எச்சரிக்கை
ஆனால் ஷெரின் அழுது புலம்பி, அதனை ஒரு பெரிய விஷயமாக்கினார். இத்தனைக்கும் தர்ஷனை பார்த்தால் தான் எல்லாவற்றையும் மறந்துவிடுவதாக வனிதாவிடம் தனது ஒரு தலை காதல் குறித்து புலம்பினார். இதனை அடிப்படையாக வைத்தே வனிதா, ஷெரினை எச்சரித்தார். இந்நிலையில் தர்ஷன் நடவடிக்கையால் அவரை செருப்பால் அடிப்பேன் என வனிதா தனக்கே உரிய பாணியில் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











