twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெளியில் வந்தால் போன் செய்கிறேன்..தூண்டில் போட்ட ராபர்ட் மாஸ்டர்..ரச்சிதா கொடுத்த ஷாக்

    |

    பிக் பாஸ் வீட்டில் எவிக்ஷன் ப்ராசஸில் இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் வெளியேற இருப்பதாக அவரே சொல்லிக் கொள்கிறார். இந்த நிலையில் தன்னுடைய மன எண்ணத்தை ரச்சிதாவிடம் சொன்னார்.

    தூண்டில் போட்ட ராபர்ட் மாஸ்டரிடம், உங்கள் மனதை காயப்படுத்த கூடாது என்பதற்காகத்தான் நான் எதுவும் சொல்வதில்லை என்று ரட்சிதா விளக்கி சொன்னார்.

    வெளியே போய் ஜாலியாக இருங்க, என்னை எதிர்பார்க்காதீர்கள் என அடித்துச் சொன்னார் ரச்சிதா.

    பாபா ரீ ரிலீஸ் செய்ய 2K கிட்ஸ் தான் காரணம்: ரஜினி சொன்ன சீக்ரெட்… போட்டுடைத்த சுரேஷ் கிருஷ்ணா பாபா ரீ ரிலீஸ் செய்ய 2K கிட்ஸ் தான் காரணம்: ரஜினி சொன்ன சீக்ரெட்… போட்டுடைத்த சுரேஷ் கிருஷ்ணா

    இதென்னடா புதுமையான முதுமைக்காதல் ரச்சிதா-ராபர்ட் மாஸ்டர்

    இதென்னடா புதுமையான முதுமைக்காதல் ரச்சிதா-ராபர்ட் மாஸ்டர்

    பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு ஒவ்வொரு சீசனிலும் காதல் ஜோடிகள் புதிது புதிதாக உருவாவார்கள். ஆரவ்-ஓவியா, கவின்-லாஸ்லியா, பாலாஜி- ஷிவானி, அமீர்-பாவனி என பல்வேறு ஜோடிகள் ஒவ்வொரு சீசனிலும் உருவானார்கள். ஆனால் இந்த ஜோடிகளின் காதல் வாழ்க்கை வெளியில் போகும் வரை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த காதலர்கள் அனைவரும் இளம் ஜோடியினர். அதேபோல் சீசன் 6-லும் அசல்-நிவாஷினி, கதிர்-குயின்சி ஜோடி காதல் உருவானது. ஆனால் எந்த சீசனிலும் இல்லாத ஒரு புதிய விந்தையாக ராபர்ட் மாஸ்டர்-ரச்சிதா என்கிற முதிய காதல் உருவாகியது.

    பள்ளி மாணவன் போல் பின்பற்றி மனதை சொன்ன மாஸ்டர்

    பள்ளி மாணவன் போல் பின்பற்றி மனதை சொன்ன மாஸ்டர்

    ஆரம்பத்தில் ராபர்ட்டின் பார்வைகளை ரச்சிதா கண்டுகொள்ளாமல் இருந்தார்.யாருக்கும் எந்த விஷயம் அவ்வளவாக தெரியாமல் இருந்தது. ஆனால் ஆனால் பள்ளி மாணவன் போல் முறைத்து முறைத்து பார்த்து ஃபாலோ பண்ணி, ஃபாலோ பண்ணி ரச்சிதாவின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார் மாஸ்டர். ஒரு கட்டத்தில் ரச்சிதாவும் ராபர்ட் மாஸ்டரின் இந்த செயலை ரசிக்க ஆரம்பித்தார். இதை பார்த்து நெட்டிசன்கள் விமர்சனம் செய்தனர். ரச்சிதாவும் ராபர்ட் மாஸ்டரை விரும்புகிறார் என்கிற தோற்றத்தை உருவாக்கும் வகையில் அவருடைய செயல்பாடுகள் பல இருந்தன.

    வேறு வழியில்லாமல் மாஸ்டருடன் பழகுகிறேன் -ஷிவினிடம் கலங்கிய ரச்சிதா

    வேறு வழியில்லாமல் மாஸ்டருடன் பழகுகிறேன் -ஷிவினிடம் கலங்கிய ரச்சிதா

    ஆனால் ஒரு நாள் திடீரென ஷிவினிடம் பேசும் பொழுது "எனக்கு வேறு வழி தெரியவில்லை, ஒரு வீட்டுக்குள் இருக்கிறோம், திரும்பத் திரும்ப இவர்கள் முகத்தை பார்க்க வேண்டும் பகைத்துக் கொண்டால் நிம்மதியாக இருக்க முடியாது வேறு வழி இல்லாமல் நான் சிரித்துக் கொண்டே போகிறேன்" என்று தெரிவித்தார். ஆனால் நாள் செல்ல செல்ல ராபர்ட் மாஸ்டர் அருகில் நெருங்கி பேசுவதும், சிரித்தபடியே அவர் பேசுவதை ரசிப்பதும், ஓரக்கண்ணால் பார்த்து சிரிப்பதும் என பள்ளி மாணவி காலத்து காதல் போல் நடந்துக்கொண்டது பலருக்கும் எரிச்சலை தந்தது.

    ராஜா ராணி டாஸ்க்கில் நெருங்கிய ரச்சிதா-மாஸ்டர்

    ராஜா ராணி டாஸ்க்கில் நெருங்கிய ரச்சிதா-மாஸ்டர்

    ராஜா ராணி டாஸ்க்கில் இது உச்சகட்டத்தை அடைந்தது. நெருக்கமாக சாப்பாட்டை பரிமாறிக் கொண்டனர், ஒரே கிளாசில் ஜூசை பரிமாறிக் கொண்டனர். இதை வெளியிலிருந்த வனிதா கூட ஒரு முறை கடுமையாக என்ன பழக்கம் இது என கண்டித்தார். இப்படியே போய்க் கொண்டிருந்த பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவராக வெளியேற வேறு வழியில்லாமல் ராபர்ட் மாஸ்டரையும் இந்த முறை நாமினேட் செய்து விட்டார்கள். ராபர்ட் மாஸ்டர் வெளியே போகும் மனநிலைக்கு வந்துவிட்டார். அவரால் டாஸ்க்கில் வேகமாக செயல்பட முடியவில்லை. வேறு எந்த வேலையிலும் ஈடுபட முடியவில்லை. எதோ வந்தோம் காலம் கழித்து விட்டோம் என்ற நிலையில் இருக்கிறார். இந்த வாரம் நான் கட்டாயம் போய் விடுவேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

    கண்ணால் பேசிக்கொள்ளும் முதுமைக்காதல் ஜோடிகள்

    கண்ணால் பேசிக்கொள்ளும் முதுமைக்காதல் ஜோடிகள்

    இந்நிலையில் ராபர்ட் மாஸ்டரும், ரச்சிதாவும் நெருக்கமாக ஒருவருக்கொருவர் சமிங்ஞையில் பேசிக்கொள்வதையும், கண்ணால் பேசிக்கொள்வதையும் பார்க்கும் ஹவுஸ் மேட்ஸ்கள் அதை கிண்டல் அடிப்பதும், அவர்கள் இருவரும் இருந்தால் ஓகே, ஓகே பேசிக் கொள்ளுங்கள் என்று ஒதுங்கி போவதும் என கிண்டலாக போய்க்கொண்டிருக்கிறது பிக்பாஸ் வீடு. இந்நிலையில் இன்று எவிக்‌ஷனில் எப்படியும் வெளியே போய் விடுவோம் என்ற நினைப்பில் காலையிலிருந்து புலம்பிக் கொண்டிருந்த ராபர்ட் மாஸ்டர் தனிமையில் ரச்சிதாவிடம் தன் மன ஓட்டத்தை லேசாக சொன்னார்.

    உங்களை குழந்தையாக பார்க்கிறேன் மாஸ்டர்-ரச்சிதா

    உங்களை குழந்தையாக பார்க்கிறேன் மாஸ்டர்-ரச்சிதா

    ஆனால் ரட்சிதா சிரித்துக்கொண்டே "மாஸ்டர் நான் உங்களை குழந்தையாக பார்க்கிறேன். உங்களை நான் அந்த எண்ணத்தில் பார்க்கவில்லை. தயவுசெய்து இந்த எண்ணத்தை எல்லாம் விட்டு விடுங்கள். நட்பாக இருந்தோம், நட்பாக பழகினோம் இதை ஒரு பாசிங் கிளவுடாக பாருங்கள்" என்று தெரிவித்தார். ஆனால் கிளவுட் (மேகம்) தானே அது இருக்கத்தானே செய்யும் அது அப்படியே இருக்கட்டும் என்று சமாளித்து பார்த்தார் மாஸ்டர். ஆனால் நான் அப்படிப்பட்டவள் இல்லை நான் வெளியே சென்றால் யாரிடம் பேசக்கூட மாட்டேன் என்று ரட்சிதா தெரிவித்தார்.

    போன் நம்பர் கொடு பேசலாம்- ராபர்ட் மாஸ்டர்

    போன் நம்பர் கொடு பேசலாம்- ராபர்ட் மாஸ்டர்

    போன் நம்பர் கொடு நான் பேசுகிறேன், சந்திக்கலாம் என்று ராபர்ட் மாஸ்டர் மெல்ல தூண்டில் போட்டார். நான் அப்படிப்பட்டவள் இல்லை மாஸ்டர் நான் பெரும்பாலும் வெளியே போனால் யாருடனும் பழக மாட்டேன் பெரும்பாலும் தொடர்பு வைத்துக்கொள்ள மாட்டேன் ஆகையால் நீங்கள் அந்த எண்ணத்தை கைவிட்டு விடுங்கள் இது சீரியல் வாழ்க்கை அல்ல என்று தெரிவித்தார். அதன் பிறகு ராபர்ட் மாஸ்டர் என்னென்னமோ சொல்லி பார்த்தும் ரச்சிதா தன் நிலையில் உறுதியாக இருந்தார். "நாம் வந்தோம் பழகினோம், சென்றோம் அந்த அளவிற்கு மட்டும் இருங்கள் இருக்கிற நாளில் சந்தோஷமாக இருங்கள். நீங்கள் போக மாட்டீர்கள் போகும் வரை சந்தோசமாக இருங்கள். வீணாக மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். என்று சொன்னார்.

    தெளிவாக இருக்கும் ரச்சிதா

    தெளிவாக இருக்கும் ரச்சிதா

    நீங்கள் மற்றவரிடம் ஒரு மாதிரி என்னிடம் ஒரு மாதிரியா பழகுவது எனக்கு ஒரு மாதிரி மனதை பிசைந்தது என்பதால் நான் அடிக்கடி மூடு அவுட் ஆனேன். என்னிடம் மட்டும் ஏன் இப்படி நடக்கிறார் என்று நினைப்பேன். ஆகவே நீங்கள் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் உங்கள் வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்கள். வெளியே பெரிய உலகம் இருக்கிறது" என்று ரச்சிதா அறிவுரை கூறினார் ஆனாலும் ராபர்ட் மாஸ்டர் "தன் முயற்சியில் சற்று மனம் தளராத விக்கிரமாதித்தன்" போல் மீண்டும் மீண்டும் முயற்சித்துக் கொண்டே இருந்தார். இது எங்கே போய் முடியுமோ தெரியவில்லை, ஆனால் ரச்சிதா தனது நிலைப்பாட்டை தெளிவாக சொன்னதை பார்க்க முடிந்தது.

    English summary
    I will call you if you come out..Robert Master who baited ..Rachita gave you a shock
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X