நிச்சயமா அரசியலுக்கு வருவேன்... பிக்பாஸ் புகழ் நடிகை போட்ட அதிரடி குண்டு!
Recommended Video
சென்னை பிக்பாஸ் சீசன் 2ல் பங்கேற்ற நடிகை யாஷிகா ஆனந்த் தான் நிச்சயமாக அரசியலுக்கு வருவேன் என தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 2ல் பங்கேற்றவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்நது பாடம், துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் பிக்பாஸ் 2ல் பங்கேற்றதன் மூலம் இவர் பெரும் பிரபலமானார்.

ஃபிரன்ட்ஷிப்
அவ்வப்போது படுகவர்ச்சியாக போட்டோக்களை போட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். அண்மையில் தனது தோழி ஐஸ்வர்யா தத்தாவுடன் தங்கள் நட்பின் ஓராண்டு நிறைவை கொண்டாடினார்.

லைவில் லிப் லாக்
அதனை இணையத்தில் லைவ்வாக தெரிவித்தனர் இருவரும். அப்போது யாஷிகா ஆனந்தின் ஆண் நண்பர் அவருக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து பரபரப்பை கிளப்பினார்.

குடும்ப ரசிகர்கள்
இந்நிலையில் தற்போது ஜாம்பி படத்தில் நடித்துள்ளார் யாஷிகா ஆனந்த். புவன் நல்லான் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் இந்த படம் உருவாகியிருக்கிறது. இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனக்கு குடும்ப ரசிகர்கள் அதிகமாகியிருப்பதாக கூறினார்.

மருத்துவ மாணவி
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் நடித்துள்ள படம் என்பதால் ஜாம்பி படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறினார். மேலும் இந்த படத்திற்காக கடினமாக உழைத்திருப்பதாகவும் கூறியுள்ள யாஷிகா, இந்த படத்தில் மருத்துவ மாணவியாக நடித்திருப்பதோடு சண்டைக் காட்சியிலும் நடித்திருப்பதாக கூறினார்.

நிச்சயம் அரசியலுக்கு வருவேன்
கோவை சென்றபோது ரசிகர்களுடன் மக்களுக்கு உதவி செய்ததாக கூறிய அவர், நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என்றும் அதன் மூலம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும் கூறினார்.

அரசியலில் ஆர்ட்டிஸ்டுகள்
ஏற்கனவே நடிகர்கள் பலரும் அரசியலில் குதித்துள்ளனர். பல மூத்த நடிகைகள் அரசியல் கட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். அண்மையில் நடிகர் சத்தியராஜின் மகளும் அரசியலுக்கு வரவுள்ளதாக கூறினார். இந்நிலையில் யாஷிகா ஆனந்தும் அரசியலுக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











