நான் எல்லை மீறுவேன்.. எப்போ தெரியுமா.. ஸ்ரீரெட்டியின் அடுத்த அதிரடி.. மிரளும் ரசிகர்கள்!
Recommended Video
சென்னை: நடிகை ஸ்ரீரெட்டி வெளியிட்டிருக்கும் போஸ்ட்டால் ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.
நடிகை ஸ்ரீரெட்டி நடிப்பில் இதுவரை எந்த சினிமாவும் வெளியாகவில்லை. தற்போதுதான் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ஸ்ரீரெட்டி.
ஆனால் திரைத்துறையினர் குறித்து அவர் கூறிய குற்றச்சாட்டால் பெரும் பிரபலமானார். பட வாய்ப்பு தருவதாக கூறி தெலுங்கு மற்றும் தமிழ்திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் தன்னை படுக்கைக்கு பயன்படுத்தியதாக குற்றம்சாட்டினார்.

சர்ச்சைகள்
அவர் கூறிய இந்த குற்றச்சாட்டால் பிரபல நடிகைகளுக்கு சமமாக பிரபலமானார். தொடர்ந்து தனது முகநூல் பக்கத்தில் பிரபலங்கள் குறித்து பல்வேறு சர்ச்சைக் கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்.
சர்ச்சைக் கருத்து
தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு தலைப்புச் செய்தியாகி வருகிறார். நாள்தோறும் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு பதிவை வெளியிட்டு ரணகளப்படுத்தி வருகிறார்.

என்ன போட்டோ?
ஸ்ரீரெட்டி போடும் பதிவுகள் மற்றும் போட்டோக்களை ரசிக்கவே ஒரு கூட்டம் உள்ளது. நாள்தோறும் ஸ்ரீரெட்டி என்ன போட்டோ போடுவார் என காத்திருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.

எல்லை மீறுவேன்
அந்த வகையில் ஸ்ரீரெட்டி இன்று பதிவிட்டுள்ள போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதாவது நல்ல விஷங்கள் என்னை எல்லை மீறச் சொல்லும் போது நான் எல்லை மீறுவேன் என தெரிவித்துள்ளார்.

தைரியமாக இருங்கள்
இதனை பார்த்த அவரது ரசிகர்கள் ஸ்ரீரெட்டியை பாராட்டி வருகின்றனர். மேலும் இதுபோன்று தைரியமாகவும் இருங்கள் என தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











