ரஜினி எனக்கு..கமல் உனக்கு..கார்த்திக் சுப்பராஜ்-லோகேஷ் கனகராஜ் போட்ட டீல்!!
சென்னை : நடிகர் ரஜினியின் மிகத் தீவிரமான ரசிகரான கார்த்திக் சுப்பராஜ் ரஜினியை வைத்து பேட்ட என்ற படத்தை இயக்கி இருந்தார்
நடிகர் கமல்ஹாசனின் மிகத் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த விக்ரம் படத்தை இயக்கியுள்ளார்
இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய கார்த்திக் சுப்பராஜ் தலைவர் எனக்கு ஆண்டவர் உனக்கு என லோகேஷ் கனகராஜிரிடம் டீலிங் பேசி வைத்துள்ளதாக சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார்.

பல ட்விஸ்ட் காட்சிகளை
பீட்சா படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் முதல் படத்திலேயே ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தார் பீட்சா திரைப்படம் வழக்கமான பேய் படங்களை போல் இல்லாமல் பல ட்விஸ்ட் காட்சிகளையும் வைத்திருந்தல் இந்த படம் அதிக அளவில் பேசப்பட்டது. குறைந்த அளவில் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வசூலை அள்ளிய இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து இருப்பார்.

ரஜினிகாந்தின் மிகத் தீவிர ரசிகர்
அதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா திரைப்படம் தேசிய விருதுகளை வென்று பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இந்த நிலையில் ரஜினிகாந்தின் மிகத் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்பராஜ் ரஜினி ஹீரோவாக நடித்த பேட்ட படத்தை இயக்கினார். ரஜினிகாந்தை ஒரு ரசிகராக எவ்வாறெல்லாம் திரையில் பார்க்க வேண்டுமோ அவ்வாறு காட்டி இருந்தது அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது எதிர்பார்த்தபடி பேட்ட வெளியாகி மாபெரும் வெற்றியும் பெற்றது

ஃபேவரைட் இயக்குனராக ஆனார்
இப்பொழுது தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் இயக்குனராக உள்ளவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அதை தொடர்ந்து இயக்கிய கைதி படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களின் ஃபேவரைட் இயக்குனராக ஆனார். விஜய் படங்களிலேயே மிக வித்தியாசமான கதைக்களத்தில் மாஸ்டர் படத்தை இயக்கி அதிலும் வெற்றி கண்டு மிகப் பெரிய வசூலை அள்ளி தமிழ் சினிமாவில் சாதனை படைத்தது.

3 நாட்களில் 150 கோடி வசூல்
இந்த நிலையில் தனது கலையுலக குருவான நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற தனது தனது நீண்ட நாள் கனவு விக்ரம் மூலம் நிறைவேறியுள்ளது. அதிரடியான ஆக்சன் படங்களுக்கு பெயர் போன லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிய விக்ரம் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது. ரிலீசாகி மூன்றே நாட்களில் 150 கோடி வரை வசூல் செய்தது ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

தலைவர் எனக்கு.. ஆண்டவர் உனக்கு
இவ்வாறு தமிழ் சினிமாவில் ஃபேவரிட் இயக்குனர்களாக பட்டையை கிளப்பிகொண்டிருக்கும் கார்த்தி சுப்பராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் நீண்ட காலமாக மிக நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையை ஆரம்ப காலகட்டத்தில் இருவரும் பேசிக் கொள்கையில் தலைவர் எனக்கு.. ஆண்டவர் உனக்கு என டீலிங் பேசிக் கொண்டார்களாம். அதன்படி கார்த்தி சுப்பராஜ் ரஜினிகாந்த் ஃபேன் பாயாக பேட்ட படத்தை இயக்கினார். அதேபோல லோகேஷ் கனகராஜ் இப்பொழுது கமல்ஹாசன் ஃபேன் பாயாக விக்ரம் படத்தை இயக்கியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் லோகேஷ் கனகராஜ் இடையே உள்ள இந்த டீலிங் குறித்து கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











