'ஓட மாட்டேன், குற்றச்சாட்டுகளை சட்டப்படி சந்திப்பேன்' - நடிகை அல்போன்சா

By Shankar

Alphonsa
சென்னை: 'நான் எங்கும் பயந்து ஓட மாட்டேன். என் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி சந்திப்பேன்' என்று நடிகை அல்போன்சா கூறினார்.

நடிகை அல்போன்சாவின் காதலரும், 'கவசம்' படத்தின் கதாநாயகனுமான வினோத் குமார் கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி அல்போன்சாவின் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். தங்கள் மகனின் மரணத்திற்கு நடிகை அல்போன்சாதான் காரணம் என்று வினோத்குமாரின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.

இதுதொடர்பாக நடிகை அல்போன்சா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "என் காதலர் வினோத்குமாரை நான் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தேன். அதற்காக முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இருந்தேன். அதற்குள் வினோத்குமார் தற்கொலை செய்துகொண்டார். அவருடைய மரணத்திற்கு நான்தான் காரணம் என்று வினோத் குமாரின் பெற்றோர் குற்றம் சாட்டுகிறார்கள். இதை நான் சட்டப்படி சந்திப்பேன்.

'கவசம்' படம் முடிவடைந்து 3 வருடங்கள் ஆகியும் திரைக்கு வரவில்லையே என்று வினோத் குமார் கவலைப்பட்டுக்கொண்டு இருந்தார். இந்த நிலையில், அவருடைய தாயார் அவருக்கு அடிக்கடி போன் செய்து கவசம் படம் எப்போது திரைக்கு வரும்? என்று கேட்டுக்கொண்டு இருந்தார்.

மீண்டும் நடிப்பேன்

ஏற்கனவே கவலைப்பட்டு கொண்டு இருந்த வினோத்குமாருக்கு இது மேலும் மனஉளைச்சலை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதுகிறேன். மீண்டும் படங்களில் நடிக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X