எனக்கும் அவருக்கும் கள்ளத்தொடர்பா.. இனிமேலும் சும்மா இருக்க முடியாது.. சீரியல் நடிகை ஆவேசம்!

Recommended Video

Jayasree interview | Jayasree Iswar | Mahalaskhmi Iswar

சென்னை: என்னை அவருடன் தொடர்புப்படுத்தி பேசிய பிறகும் அமைதியாக இருக்க முடியாது என சீரியல் நடிகை ஜெயஸ்ரீ ஆவேசமாக பேசியுள்ளார்.

வம்சம் சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகை ஜெயஸ்ரீ. ஏற்கனவே திருமணமான இவர், தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு ஈஸ்வர் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இதனை தொடர்ந்து சீரியல்களில் நடிக்க தொடங்கினார் ஈஸ்வர். இந்நிலையில் ஈஸ்வருக்கும் மற்றொரு சீரியல் நடிகையான மகாலட்சுமிக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார் ஜெயஸ்ரீ.

 ஜாமீனில் ஈஸ்வர்

ஜாமீனில் ஈஸ்வர்

அவர்கள் இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோக்கள், இருவரும் கொஞ்சிக்கொண்ட சாட்டுகளின் ரெக்கார்டுகள் உள்ளிட்ட ஆதாரங்களை வெளியிட்டார் ஜெயஸ்ரீ. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஈஸ்வர் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

அண்ணன் தங்கை

அண்ணன் தங்கை

வெளியே வந்த கையோடு பிரஸ் மீட் கொடுத்த ஈஸ்வர் ஜெயஸ்ரீக்கும் மகாலட்சுமியின் கணவருக்கும்தான் தொடர்பு என்றார். அதனால் அதிர்ச்சியடைந்த மகாலட்சுமியின் கணவர் அனிலும், ஜெயஸ்ரீயும் நாங்கள் அண்ணன் தங்கையாகதான் பழகுகிறோம் என்றனர்.

கொலை மிரட்டல்

கொலை மிரட்டல்

இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் ஜெயஸ்ரீ. அப்போது மகாலட்சுமி மற்றும் தனது கணவர் ஈஸ்வர் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்தார். மகாலட்சுமிக்கு வேண்டியவர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்புப்படுத்தி பேசுகிறார்

தொடர்புப்படுத்தி பேசுகிறார்

மேலும் மகாலட்சுமியின் கணவர் என்னை தங்கை என்று கூறியப் பிறகும் ஈஸ்வர் என்னை அவருடன் தொடர்புப்படுத்தி பேசி வருகிறார். இனியும் நான் சும்மா இருக்கப்போவதில்லை.

வழக்கு தொடரப் போகிறேன்

வழக்கு தொடரப் போகிறேன்

இதைவிட என்னை கேவலப்படுத்த என்ன இருக்கிறது? அவருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்போவதாகவும் நடிகை ஜெயஸ்ரீ ஆவேசமாக தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X