கண்ணகி மதுரையை எரித்தது போல் நான் தமிழ்நாட்டை எரித்து விடுவேன்.. மிரட்டும் மீரா மிதுன்!

சென்னை: கண்ணகி மதுரையை எரித்தது போல் தான் தமிழ் நாட்டையே எரித்துவிடுவேன் என நடிகை மீரா மிதுன் மிரட்டியுள்ளார்.

Recommended Video

Meera Mithun நிஜ சாதனைகள் • Super Model, Miss TamilNadu

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் மீரா மிதுன். இதில் சக போட்டியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதனை தொடர்ந்து இயக்குநர் சேரன் மீது அபாண்ட குற்றச்சாட்டை கூறினார். இதன் எதிரொலியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் மீரா மிதுன்.

அடுத்த முதல்வர்

அடுத்த முதல்வர்

தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் மீரா மிதுன். அரசியல் ஆசை உள்ள நடிகை மீரா மிதுன், தமிழகத்தின் அடுத்த முதல்வர் தான்தான் என கூறி வருகிறார். தமிழக அரசு மற்றும் அமைச்சர்கள் என பலரையும் விளாசி வருகிறார்.

பலருடன் சண்டை

பலருடன் சண்டை

தமிழக அரசை களைத்து விட்டு தன்னை முதல்வராக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்து வருகிறார் மீரா மிதுன். அதோடு நடிகர் நடிகைகள் பலரையும் வம்பிழுத்து வருகிறார். என்ன பிரச்சனை என்றாலும் பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கை குறிப்பிட்டு வருகிறார்.

த்ரிஷாவுடன் வம்பு

த்ரிஷாவுடன் வம்பு

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பெயரில் சம்பாதித்த பணத்தை எல்லாம் தருமாறு டிக்டாக் நிறுவனத்துடன் மல்லுக்கட்டினார் நடிகை மீரா மிதுன். அதுகுறித்தும் பிரதமர் மோடியிடம் புகார் அளித்தார். தொடர்ந்து நடிகை த்ரிஷாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

எரித்து விடுவேன்

எரித்து விடுவேன்

இந்நிலையில் ஒட்டு மொத்த தமிழகத்தையும் விளாசி வருகிறார். ஏற்கனவே ஒரு டிவிட்டில் தமிழக மக்களை வெளுத்து வாங்கிய மீரா மிதுன் தன்னுடைய மற்றொரு டிவிட்டின் மூலம் தமிழகத்தையே எரித்து விடுவேன் மிரட்டியிருக்கிறார்.

ஏன் என் பின்னால்

ஏன் என் பின்னால்

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், தமிழகம் தமிழர்களுக்கும் இந்துக்களுக்கும் என நான் கருதுகிறேன், ஆனால் மலையாளிகள், கிறிஸ்தவர்கள் ஆதிக்கம் செலுத்தி, ஒரு தமிழ் பெண்ணுக்கு அநீதி இழைக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஏன் இன்னும் என் பின்னால் அலைகிறார்கள்!

கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்

கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்

மதுரையை கண்ணகி எரித்தது போல எனக்கு கோபம் வரும்போது, நான் தமிழகத்தை எரித்துவிடுவேன். மோடி தமிழகத்தை அழித்துவிடுங்கள் என பதிவிட்டுள்ளார். மீரா மிதுனின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் கழுவி ஊற்றியுள்ளனர்.

பெயரை கெடுக்காதீர்கள்

பெயரை கெடுக்காதீர்கள்

கண்ணகியோடு உங்களை ஒப்பிடாதீர்கள்.. கண்ணகியும் நீங்களும் ஒன்றா.. இங்கு யாரும் யாரையும் டாமினேட் செய்யவில்லை. கண்ணகி இந்துக்கள் வணங்கும் பெண் கடவுள், உங்களுடைய சில்லறைதனமான விஷயங்களுக்காக அவர் பெயரை கெடுக்காதீர்கள் என எச்சரித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X