எப்போது திருமணம்? லாஸ்லியா சொன்ன பரபரப்பு பதில்.. குஷியில் ஆர்மியினர்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று கவினை காதலித்த லாஸ்லியா தனது திருமணம் குறித்த முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் 15 போட்டியாளர்களில் லாஸ்லியாவும் கவினும் காதலித்தனர்.
லாஸ்லியாவின் பெற்றோர் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த போதும் லாஸ்லியா தனது காதலை கைவிடவில்லை. எப்படியாவது பெற்றோரை சமாதானப்படுத்தி விடலாம் என்ற முடிவுடன் உள்ளார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பு
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை கடந்த பிறகு பிக்பாஸ் வீட்டிற்குள் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஃபைனலுக்கு தகுதி பெற்ற லாஸ்லியா, ஷெரின், சாண்டி, முகென் ஆகியோர் பங்கேற்றனர்.

எதிர்பார்க்கவில்லை
அப்போது பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு ஒவ்வொருத்தரும் பதில் தெரிவித்தனர். லாஸ்லியாவிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, நிச்சயமாக ஃபைனலுக்கு வருவேன் எதிர்பார்க்கவில்லை. மக்கள் கொடுத்த ஆதரவால்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என்றார்.

எந்த சிக்கலும் இல்லை
இதனைத்தொடர்ந்து தன்மீது தனது அப்பா காட்டிய கோபம் குறித்து பேசிய லாஸ்லியா, அவருடைய கோபத்தை பார்த்தாலே தெரிந்திருக்கும் நான் எப்படிபட்ட சமூகத்தில் இருந்து வந்திருப்பேன் என்று. என் அப்பா என்னிடம் கோபப்பட்டதால் அந்த உறவில் எந்த சிக்கலும் இல்லை. என் நன்மைக்காகதான் அவர் அப்படி பேசினார்.

சம்மதத்துடன்தான் திருமணம்
என் அப்பாவுக்கு எங்கள் மீது பாசம் அதிகம். என் பெற்றோர் காதல் திருமணம் செய்தவர்கள். நாங்கள் இப்படித் தான் காதலித்தோம் எனச் சொல்லிதான் எங்களை வளர்த்தார்கள். ஆனாலும் பெற்றோர் சம்மதத்துடன் தான் நான் திருமணம் செய்துக்கொள்வேன். இவ்வாறு கூறினார்.

மிரட்டிய அப்பா
கவினுடனான காதலுக்கு லாஸ்லியாவின் பெற்றோர் இதுவரை சம்மதிக்கவில்லை. கடைசியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வீடியோ கால் மூலம் லாஸ்லியா பேசியபோது கூட என்னைப்பற்றி உனக்கு தெரியும் என்று நினைக்கிறேன். ஒழுங்காக விளையாடிவிட்டு வா என்று மிரட்டும் தொனியில் பேசினார். ஆனாலும் லாஸ்லியா கவினை தீவிரமாக காதலித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











