twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “இங்கதான நடிக்கவிட மாட்டேங்குறீங்க.. அப்போ நான் ஹாலிவுட், நெட்பிளிக்ஸுக்கு போறேன்”.. வடிவேலு ஆவேசம்!

    தமிழ் சினிமாவில் நடிக்கவிடா விட்டால் ஹாலிவுட்டுக்கு செல்ல இருப்பதாக கூறியுள்ளார் நடிகர் வடிவேல்.

    |

    Recommended Video

    Vadivelu Interview: நடிகர் வடிவேலு ஹாலிவுட்,நெட் பிளிக்ஸ் போன்றவற்றில் நடிக்க இருப்பதாக கூறியுள்ளார்

    சென்னை: இம்சை அரசன் 24ம் புலிகேசி பட விவகாரத்தால் தமிழ் சினிமாவில் நடிக்கவிடா விட்டால் ஹாலிவுட், நெட் பிளிக்ஸ் போன்றவற்றில் நடிக்க இருப்பதாக நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

    இம்சை அரசன் 23ம் புலிகேசி வெற்றிக்குப் பின்னர், இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் ஆரம்பிக்கப்பட்டது. இப்படத்தையும் இயக்குநர் ஷங்கரே தயாரிக்க, சிம்புதேவனே இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.

    ஆனால், பட வேலைகள் ஆரம்பித்த வேகத்திலேயே நின்று போனது. கருத்துவேறுபாடு காரணமாக வடிவேலு நடிக்க வரவில்லை எனக் கூறப்பட்டது. இப்பட பிரச்சினையால் வடிவேலுவை மேற்கொண்டு படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், கடந்தவாரம் நேசமணி ஹேஷ்டேக் மூலம் மீண்டும் உலகளவில் பிரபலமானார் வடிவேலு. தனது மாமியார் மரணத்தால் சோகத்தில் இருந்தவர், நேசமணி விவகாரம், இம்சை அரசன் 24ம் புலிகேசி படப் பிரச்சினை பற்றி தற்போது பேசியுள்ளார்.

    சிம்புதேவன்:

    சிம்புதேவன்:

    இது தொடர்பாக இணையதள ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், ‘சிம்புதேவன் பெரிய இயக்குநர் எல்லாம் கிடையாது. இம்சை அரசன் 23ம் புலிகேசி பட சமயத்தில் ஒளிப்பதிவாளருக்கு, எனக்கு என எல்லோருக்குமே அவன் படம் வரைந்து தான் காட்டுவான். மற்ற இயக்குநர்கள் மாதிரி நடிச்சுக்காட்ட எல்லாம் அவனுக்குத் தெரியாது.

    நடிக்கத் தெரியாது:

    நடிக்கத் தெரியாது:

    ஒரு காட்சியில் எனது இரண்டு கதாபாத்திரங்களும் அடுத்தடுத்து நடந்து வருவது போன்று நடிக்க வேண்டும். இரண்டு கதாபாத்திரங்களின் நடையிலும் வித்தியாசம் தெரிய வேண்டும். சரி, எப்படி நடக்க வேண்டும் என நடித்துக் காட்டச் சொன்னால், அவனுக்கு அது தெரியவில்லை. எனக்கு நிஜத்துலயே ஒழுங்கா நடிக்கத் தெரியாது. இதுல எப்டி சார் ஹி.. ஹி.. ஹி.. என்பான்.

    3 கேரக்டர்:

    3 கேரக்டர்:

    ஒரு வரலாற்றுப் படம் பண்ணும் போது, அதுக்கு சரியான தொழில்நுட்பக் கலைஞர்கள் தேவை. இப்படத்தில் எனக்கு மூணு கதாபாத்திரம். படப்பிடிப்பு ஆரம்பிச்சு ஒரு பாட்டுதான் எடுத்தோம். அதற்குள் தொழில்நுட்பக் கலைஞர்களை மாற்றி விட்டனர்.

    கிராபிக்ஸ் ஷங்கர்:

    கிராபிக்ஸ் ஷங்கர்:

    ஷங்கர் அதை மாத்துங்க, இதை மாத்துங்கனு சொல்றாருண்ணு சிம்புதேவன் சொல்லிக்கிட்டே இருப்பான். அதுக்குத்தான் நான் கேட்டேன், ‘எல்லாத்தையும் அவர் இஷ்டத்துக்கு மாத்துறதுனா, பேசாம அவரே இந்தப் படத்தை டைரக்ட் செய்யலாமே? என. உடனே வெளியில் போய், என்னையே மாத்தச் சொல்றாருனு சொல்லிட்டான்.

    சொம்பு காமெடி:

    சொம்பு காமெடி:

    ஒரு படத்துல சொம்பு காமெடி வரும்ல. நான் சாதாரண சொம்புல தண்ணி கேட்பேன். அதுக்கு மாப்பிள்ளை தங்க சொம்பு தந்தாதான் தாலி கட்டுவேன்னு சொல்லிட்டாருனு. இந்த விவகாரம்கூட அப்டித்தான் நான் ஒண்ணு சொல்ல.அது வெளில வேற மாதிரி வந்துடுச்சு. ஷங்கர் கிராபிக்ஸ் வச்சு படம் எடுக்கிறவர். எனக்கு எதுக்கு கிராபிக்ஸ். வடிவேலுவுக்கு உடல்மொழிதான் தேவை.

    பஞ்சாயத்து:

    பஞ்சாயத்து:

    பஞ்சாயத்து போய்க்கிட்டு இருக்கு. தப்பான 10 பேரு உட்கார்ந்துக்கிட்டு வடை திண்ணுக்கிட்டு சினிமாவ கெடுக்குறானுங்க. எனக்கும் ஆதரவா சில பேரு இருக்காங்க. என்னை கூப்பிடுறானுங்க. எதுக்கு கூப்பிடுறானுங்கன்னு தெரியல. வந்து காலுல விழுன்னு கூப்பிடுறானுங்களான்னு தெரியல.

    நெட்பிளிக்ஸ்:

    நெட்பிளிக்ஸ்:

    எனக்கு வாய்ப்பு தந்தா தமிழ் சினிமாவுல நடிப்பேன். இல்லாட்டி எனக்கு ஹாலிவுட்டுலே இருந்தும் அழைப்பு வருது. பேசாம அங்க போயிடபோறேன். நெட்பிளிக்ஸ் மூலமா நடிச்சுட்டுப் போறேன்''என்று வடிவேலு ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

    English summary
    Actor Vadivelu has announced that he will act in Hollywood, OTT, if he was not given chance in Tamil cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X